Mohammed Shami:‘கிரிக்கெட் ரெக்கார்டு புக்ல என் பெயரை எழுதிக்கோங்க’ ஷமியின் சாதனை
150 விக்கெட்டுகளை அதிவேகமாக வீழ்த்திய முதல் இந்திய வேகப்பந்துவீச்சாளர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார். இதன்மூலம் கிரிக்கெட் ரெக்கார்டு புக்கில் தன்னுடைய பெயரை எழுதிக் கொண்டுள்ளார். அதாவது, ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அதிவேகமாக 150 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்திய வேகப்பந்துவீச்சாளர் என்ற சாதனைக்கு சொந்தக்காரராகியுள்ளார்.
முதல் இந்திய வீரர்
இந்தப் போட்டியில் முகமது ஷமி 7 ஓவர்களில் 31 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அவரின் மொத்த விக்கெட்டுகள் எண்ணிக்கையும் 150 ஆக உயர்ந்தது. இதன் மூலம் 80 போட்டியில் 150 விக்கெட்களை வீழ்த்தியதன் மூலம் அதிவேகமாக 150 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார். 97 ஒருநாள் போட்டிகளில் 150 விக்கெட்டுகளை வீழ்த்திய அஜித் அகர்கர் இதுவரை முதல் இடத்தில் இருந்தார். அவரின் சாதனையை நேற்று ஷமி முறியடித்ததன் மூலம் அகர்கர் 2வது இடத்துக்கு சென்றார்.
மேலும் படிக்க | IND vs ENG: 2 ஆண்டுகளுக்குப் பிறகு ஒன்றாக விளையாடும் மூவேந்தர்ஸ்! யார் அவர்கள்?
சர்வதேச அளவில் 3வது இடம்
சர்வதேச அளவில், மிட்செல் ஸ்டார்க் 77 போட்டிகளிலும், சக்லைன் முஷ்டாக் 78 போட்டிகளிலும் 150 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர். அவர்களுக்கு அடுத்த இடத்தில் முகமது ஷமி இருக்கிறார். சர்வதேச அளவில் 150 விக்கெட்டுகளை வேகமாக வீழ்த்திய 3வது பந்துவீச்சாளராக உயர்ந்தார். பந்துகளின் எண்ணிக்கையில் ஸ்டார்க், மெண்டிஸ், சக்லைன் மற்றும் ரஷித் ஆகியோருக்குப் பிறகு 150 விக்கெட்டுகளைக் கொண்ட கிளப்பில் ஐந்தாவது அதிவேக வீரராக ஷமி இருக்கிறார்.
சிறந்த ஸ்ட்ரைக் ரேட்
ஷமி 80 ஒருநாள் போட்டிகளில் 5.61 சராசரியில் 151 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஷமியின் பந்துவீச்சு ஸ்டிரைக் ரேட் 27 ஆக உள்ளது. இதன் மூலம் ஒருநாள் கிரிக்கெட்டில் 150 விக்கெட்டுகளை வீழ்த்தியவர்களில் சிறந்த ஸ்டைக்ரேட் வைத்திருக்கும் இரண்டாவது வேகப்பந்து வீச்சாளர் என்ற பெருமைக்கும் ஷமி சொந்தக்காரராகியுள்ளார். இந்தப் பட்டியலில் ஆஸ்திரேலிய வீரர் மிட்சல் ஸ்டார்க் முதல் இடத்தில் இருக்கிறார். 2013ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக உலகக் கோப்பையில் அறிமுகமான ஷமி, ஒருநாள் கிரிக்கெட்டில் சிறந்த ஸ்டைக் ரேட்டைக் கொண்டுள்ளார்.
SENA நாடுகளில் சிறந்த ஸ்ட்ரைக் ரேட்
கிரிக்கெட்டில் சேனா நாடுகள் எனப்படும் தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளிலும் சிறந்த ஸ்டைக் ரேட்டைக் கொண்டிருக்கிறார் சமி. இந்த நான்கு நாடுகளில் 38 போட்டிகளில் 21.12 சராசரியில் 83 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். சேனாவில் ஸ்டார்க், பிரட்லி, ஷேன் பாண்ட், வக்கார் யூனிஸ், டிரென்ட் போல்ட் ஆகியோரை விடவும் ஷமி முன்னணியில் இருக்கிறார்.
மேலும் படிக்க | ’ரூல்ஸ் மாத்தனும்’ ஐசிசி-க்கு மெசேஜ் அனுப்பிய அஸ்வின்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ