பும்ராவுக்கு பதிலாக இந்திய அணிக்கு வந்திருக்கும் ’பெங்களூரு புயல்’
காயத்தால் பும்ரா விலகி இருக்கும் நிலையில் அவருக்கு பதிலாக பெங்களுரு புயலை அணிக்கு கொண்டு வந்திருக்கிறது பிசிசிஐ.
இந்திய அணி தற்போது தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்று இருக்கிறது. முதல் போட்டியில் சிறப்பாக செயல்பட்ட இந்திய அணி, ஞாயிற்றுக் கிழமை 2வது போட்டியில் விளையாடுகிறது. இந்த தொடரில் இந்திய அணியில் இடம்பிடித்திருந்த ஜஸ்பிரித் பும்ரா, காயத்தால் தற்போது விலகியிருக்கிறார். அவர் ஏற்கனவே காயத்தால் அவதிப்பட்டு பெங்களுருவில் இருக்கும் தேசிய கிரிக்கெட் அகாடமியில் சிகிச்சை பெற்று குணமடைந்தார்.20 ஓவர் உலகக்கோப்பையில் விளையாட வேண்டும் என்பதற்காக அவருடைய காய பிரச்சனையில் பிசிசிஐ கூடுதல் கவனம் செலுத்தியது.
அதனால் விரைவாக குணமடைந்த அவர் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான தொடரில் இடம்பிடித்தார். இருப்பினும், அவரது காயம் முழுமையாக குணமடையவில்லை என கூறப்படுகிறது. தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் 20 ஓவர் போட்டியிலும் அவர் விளையாடவில்லை. இந்நிலையில், தொடரில் இருந்து தற்போது முழுமையாக விலகியிருக்கிறார். பும்ரா 20 ஓவர் உலகக்கோப்பையில் பங்கேற்பது கடினம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இது இந்திய அணிக்கு பின்னடைவாக பார்க்கப்பட்டாலும், ரிபிளேசுக்கு பெங்களுரு புயலை அழைத்து வந்திருக்கிறது பிசிசிஐ.
மேலும் படிக்க | வயசானாலும்... அது மட்டும் மாறல - சின்ன தல ரெய்னாவின் மிரட்டல் கேட்ச்
ஐபிஎல் போட்டிகளில் ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்காக விளையாடும் முகமது சிராஜ், பும்ராவுக்கு பதிலாக தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான 20 ஓவர் தொடரில் சேர்க்கப்பட்டுள்ளார். நீண்ட நாட்களுக்குப் பிறகு இந்திய 20 ஓவர் அணியில் முகமது சிராஜ் இடம்பிடித்திருக்கிறார். 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் தொடர்ச்சியாக சிறப்பான பந்துவீச்சை சிராஜ் கொடுத்தபோதும், இந்திய அணியில் அவரால் இடம்பெற முடியவில்லை. அணிக்கு தேர்வு செய்யப்பட இருக்கும் நேரத்தில் சிராஜ் காயமடைந்ததும் அவருக்கு பின்னடைவாக அமைந்தது.
தற்போது பிட்னஸாக இருக்கும் அவர், இந்திய அணிக்காக விளையாட இருக்கிறார். பும்ராவுக்கு மாற்றான பந்துவீச்சாளராக வந்திருப்பதால், அவரிடம் நிறைய எதிர்பார்க்கிறது அணி நிர்வாகம். முகமது சிராஜூக்கும் இது தெரியும். இதனால் பிளேயிங் லெவனில் ஒருவேளை வாய்ப்பு கிடைத்தால் அதனை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற முனைப்பில் இருக்கிறார் அவர்.
மேலும் படிக்க | பார்ப்பதற்கே பல கோடி கண்கள் வேண்டும் - மாஸ்டர் பிளாஸ்டரின் மாஸான ஷாட்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ