இந்திய அணியின் புதிய பந்துவீச்சு பயிற்சியாளர்! பிசிசிஐ அதிரடி அறிவிப்பு!
வரும் வெள்ளிக்கிழமை பங்களாதேஷ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டி தொடங்குவதற்கு முன்பு, மோர்னே மோர்கல் இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக பொறுப்பேற்று கொண்டார்.
இந்திய அணி ஒரு மாத இடைவேளைக்குப் பிறகு வரும் செப்டம்பர் 19ஆம் தேதி சென்னையில் பங்களாதேஷ் அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளது. மொத்தம் 2 டெஸ்ட் போட்டி மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாட பங்களாதேஷ் அணி இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது. இந்நிலையில், ஒரு வாரத்திற்கு முன்பே வெள்ளிக்கிழமை இந்திய அணியின் வீரர்கள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பயிற்சிகளை தொடங்கியுள்ளனர். இதில் இந்திய அணியின் புதிய பந்துவீச்சு பயிற்சியாளர் மோர்னே மோர்கல் இணைந்துள்ளார். கடந்த மாதம் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணியுடன் மோர்னே மோர்கல் செல்லவில்லை. புதிய தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் மட்டுமே சென்று இருந்தார். தனிப்பட்ட காரணங்களுக்காக தென்னாப்பிரிக்காவில் இருந்து மோர்னே மோர்கல் இந்தியா அணியுடன் இணையவில்லை.
பொதுவாக இந்தியாவில் நடைபெறும் டெஸ்ட் போட்டிகளுக்கு அதிகபட்சம் 3 வேகப்பந்து வீச்சார்களை மட்டுமே பிசிசிஐ தேர்வு குழு தேர்வு செய்யும். ஆனால் இந்த முறை நான்கு பந்துவீச்சாளர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஜஸ்பிரித் பும்ரா மற்றும் முகமது சிராஜ் தவிர ஆகாஷ் தீப் மற்றும் யாஷ் தயாள் ஆகிய இருவருக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தற்போது நடைபெற்று வரும் துலீப் டிராபியின் முதல் சுற்றில் இருவரும் சிறப்பாக விளையாடியதால் அவர்களுக்கு அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்திய அணியில் உள்ள வீரர்களுக்கு எதிராக சர்வதேச போட்டிகளில் வந்து வீசி உள்ளார் மோர்னே மோர்கல். அவர்களுடன் இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக பயிற்சியில் ஈடுபட்ட அனுபவத்தை பற்றி பேசி உள்ளார் மோர்னே மோர்கல்.
"என்னைப் பொறுத்தவரை, ஒவ்வொரு வீரர்களுடன் தனிப்பட்ட முறையில் நன்றாக தொடர்பு கொள்வது முக்கியம். இந்த வீரர்களில் சிலருடன் நான் சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளேன், அவர்களை ஐபிஎல்லில் பார்த்திருக்கிறேன். ஒரு அணியில் ஒன்றாக இருப்பது மற்றும் வீரர்களுடன் நல்ல உறவுகளை உருவாக்குவது மிகவும் முக்கியம். ஒவ்வொரு வீரர்களை பற்றிய புரிதலைப் பெறுவது, அவர்களின் பலம் மற்றும் பலவீனங்களைக் தெரிந்து கொள்வது மற்றும் ஒவ்வொரு தொடரிலும் எப்படி விளையாடுவது என்பதை முடிவு செய்வது அவசியம். இந்திய வீரர்கள் எவ்வளவு துடிப்புடன் இருக்கின்றனர், தொழில்முறையாக எப்படி பயிற்சி பெறுகின்றனர் என்பதைக் கண்டு நான் பிரமித்து போனேன்" என்று மோர்கல் கூறினார்.
இந்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் டெஸ்ட் தொடரில் இந்திய அணி 4-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. அதன் பிறகு பங்களாதேஷ் அணிக்கு எதிராக டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இங்கிலாந்து தொடரில் விளையாடாத விராட் கோலி இந்த போட்டியில் பங்கேற்றுள்ளார். பங்களாதேஷ் தொடரைத் தொடர்ந்து, நியூஸிலாந்துக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மற்றும் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக பார்டர்-கவாஸ்கர் டிராபி ஆகிய தொடர்களில் இந்திய அணி விளையாட உள்ளது.
வங்கதேச டெஸ்ட் தொடரின் முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி
ரோஹித் சர்மா (C), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷுப்மான் கில், விராட் கோலி, கேஎல் ராகுல், சர்பராஸ் கான், ரிஷப் பந்த் (WK), துருவ் ஜூரல் (WK), ஆர் அஷ்வின், ஆர் ஜடேஜா , அக்சர் படேல், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், ஆகாஷ் தீப், ஜஸ்பிரித் பும்ரா, யாஷ் தயாள்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ