சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்ற மகேந்திர சிங் தோனி, இப்போது ஜாலியாக குடும்பத்துடன் நேரத்தை செலவிட்டு வருகிறார். விம்பிள்டன் உள்ளிட்ட டென்னிஸ் தொடர்களை நேரில் சென்று பார்த்து வந்த அவர், இந்திய அணிக்கு முதன்முறையாக உலக கோப்பையை பெற்று கொடுத்த கேப்டன் கபில்தேவையும் சந்தித்து உரையாடினார். அண்மையில் இருவரும் கோல்ப் விளையாடிய புகைப்படங்கள் இணையத்தில் வெளியானது. இந்நிலையில் அடுத்த ஆண்டு நடைபெறும் ஐபிஎல் 2023 குறித்து தோனி சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அந்த நிகழ்ச்சியில் ஐபிஎல் 2023-ல் சென்னை சூப்பர் கிங்ஸின் ஆட்டம் எப்படி இருக்கும் என கேட்க, சேப்பாக்கத்தில் சிஎஸ்கேவின் கம்பேக்கை நீங்கள் பார்ப்பீர்கள் என மாஸாக பதில் அளித்துள்ளார். அவரின் இந்த கம்பீரமான பேச்சு சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஏனென்றால் சிஎஸ்கேவுக்கு கடந்த ஐபிஎல் தொடர் சிறப்பாக அமையவில்லை. ஜடேஜா தலைமையில் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பல போட்டிகளில் தொடர்ச்சியாக தோல்வியை சந்தித்தது. மேலும், ஜடேஜாவும் சிறப்பாக விளையாடவில்லை. போட்டியின்போது முக்கியமான முடிவுகளை தோனியே எடுத்தார். ஜடேஜா பவுண்டரி லைன் அருகே பீல்டிங் செய்து கொண்டிருந்தார்.



மேலும் படிக்க | பும்ரா இல்லை - உலகக்கோப்பையில் இந்தியாவை காப்பாற்றப்போவது யார்? - இதோ!


இது அப்போது கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியது. கேப்டன் பொறுப்பை ஒருவரிடம் ஒப்படைத்த பிறகு தோனி தலையீடு தேவையற்றது என்றும், ஜடேஜாவை அவமானப்படுத்துவது போல் இருப்பதாகவும் கூறினார். இதனால் தொடரின் பாதியிலேயே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து ஜடேஜா விலக, மீண்டும் கேப்டன் ஆனார் தோனி. அவர் இப்போது 40 வயதைக் கடந்துவிட்டதால் இந்த ஆண்டு ஐபிஎல் போட்டி விளையாடுவாரா? என்ற கேள்வி இருந்து வந்தது. அதற்கு பதில் அளித்த சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாக இயக்குநர் காசிவிஸ்வநாதன், அடுத்த ஆண்டு ஐபிஎல் போட்டியிலும் தோனி தான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எனக் கூறினார். இப்போது தோனியும் அதனை உறுதிபடுத்தியிருக்கிறார். தோனியின் இந்த பதில் பழைய சிஎஸ்கேவாக சேப்பாக்கம் மைதானத்தில் சரவெடியை பார்க்கலாம் என ரசிகர்களும் காத்திருக்கின்றனர். 


மேலும் படிக்க | இந்தியா - பாகிஸ்தான் மோதும் போர்'களம்' ரெடி; ஆஸ்திரேலியா வெளியிட்ட வீடியோ!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ