ஒருநாள் போட்டிகளில் 100 ஸ்டம்பிங் செய்த முதல் விக்கெட் கீப்பர் என்ற பெருமை இந்தியாவின் முன்னாள் கேப்டன் டோனிக்கு கிடைத்துள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இலங்கை சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி ஏற்கனவே டெஸ்ட் தொடரை கைப்பற்றியது. இதையடுத்து ஒருநாள் போட்டிகள் நடைபெற்று வந்தன. 4 ஒருநாள் போட்டிகளிலும் இந்திய அணி வென்றது. நேற்று 5-வது ஒருநாள் போட்டி நடைபெற்றது. 


கொழும்பு ஆர்.பிரேமதாசா மைதானத்தில் இலங்கை அணியுடன் நேற்று நடந்த 5-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில், சாஹல் பந்துவீச்சில் அகிலா தனஞ்ஜெயாவை ஸ்டம்பிங் செய்து வெளியேற்றியதன் மூலமாக டோனி இந்த சாதனையை நிகழ்த்தினார். 


இதில் இந்திய அணிக்காக 97 ஸ்டம்பிங்கும், ஆசிய லெவன் அணிக்காக 3-ம் அடங்கும். இலங்கை விக்கெட் கீப்பர் குமார் சங்கக்கராவின் சாதனையை அவர் முறியடித்துள்ளார். 


இலங்கையின் ருமேஷ் கலுவிதரணா 3வது இடத்திலும் (75), பாகிஸ்தானின் மொயின் கான் (73) 4வது மற்றும் ஆஸி. விக்கெட் கீப்பர் ஆடம் கில்கிறிஸ்ட் (55) 5வது இடத்தில் உள்ளனர். டோனி அதிகபட்சமாக ஹர்பஜன் சிங் பந்துவீச்சில் 19 ஸ்டம்பிங் செய்துள்ளார்.