டோனி ஓய்வு பெறுவதற்கான உடனடி திட்டங்கள் எதுவும் இல்லை என டோனியின் நீண்ட கால நண்பரான அருண் பாண்டே தெளிவுபடுத்தியுள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நியூசிலாந்திற்கு எதிரான உலகக் கோப்பை அரையிறுதி போட்டியில் இந்தியாவின் தோல்விக்கு பின்னர் டோனியின் ஓய்வு குறித்து செய்திகள் வைரலாக பரவியது. இதற்கிடையில் மேற்கிந்திய தீவுகள் அணியுடனான தொடரில் இருந்து டோனிக்கு ஓய்வு அளிக்கப்படுவதாகவும் செய்திகள் பரவின.


டோனியின் நீண்ட கால நண்பரான அருண் பாண்டே, அவரது விளையாட்டு மேலாண்மை நிறுவனமான ரிதி ஸ்போர்ட்ஸூக்கு தலைமை தாங்குவதோடு தனது வணிக நலன்களை கவனித்து வருகிறார். இந்நிலையில் PTI -க்கு அளித்த பேட்டியில், டோனி ஓய்வு பெறுவதற்கான உடனடி திட்டங்கள் எதுவும் இல்லை. அவரைப் போன்ற ஒரு சிறந்த வீரரின் எதிர்காலம் குறித்த தொடர்ச்சியான யூகங்கள் வெளி வருவது துரதிர்ஷ்டவசமானது என தெரிவித்துள்ளார்.


எதிர்வரும் ஆகஸ்ட் 3-ஆம் தேதி மேற்கிந்திய தீவுகள் உடனான சுற்றுப்பயணம் துவங்குகிறது. இந்த சுற்றப்பயணத்திற்கு இந்திய அணியை பிசிசிஐ தேர்வுசெய்தவுடன், டோனியின் எதிர்கால திட்டங்கள் குறித்த தெளிவான தகவல்கள் கிடைக்கும் என கூறப்படுகிறது. 


இந்நிலையில் டோனி தனது துணை ராணுவ படைப்பிரிவுக்கு சேவை செய்ய விளையாட்டிலிருந்து இரண்டு மாத ஓய்வு எடுப்பதாக பிசிசிஐக்கு தெரிவித்துள்ளார். இதனால் மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணத்தில் அவர் கலந்து கொள்ள மாட்டார் என அவரது நண்பர் அருண் பாண்டே தெளிவுபடுத்தியுள்ளார்.


இது குறித்து பிசிசிஐ அதிகாரி ஒருவர் பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த  பேட்டியில் கூறி இருப்பதாவது:-


"நாங்கள் மூன்று விஷயங்களை தெளிவுப்படுத்த விரும்புகிறோம். எம்.எஸ். டோனி இப்போது கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறவில்லை. அவர் முன்னர் செய்த தனது துணை ராணுவ படைப்பிரிவுக்கு சேவை செய்ய இரண்டு மாத ஓய்வு நாளை எடுத்து உள்ளார். கேப்டன் விராட் கோலி மற்றும் தேர்வுக்குழு  தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் ஆகியோரின் முடிவை நாங்கள் இப்போது அறிவித்துள்ளோம் என தெரிவித்துள்ளார்.