எதிர்வரும் IPL 2019-ஆம் தொடரில் ‘200 சிக்ஸர்கள் அடித்த வீரர்கள்’ என்னும் பெருமையினை பெற இந்திய வீரர்கள் டோனி, ரெய்னா, ரோகித் ஷர்மா காத்திருக்கின்றனர்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வரும் 23-ஆம் தேதி தொடங்வுள்ள IPL போட்டியி்ல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் தோனி, ரெய்னா, மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி ஆகியோருக்கு இடையே ‘200 சிக்ஸர்கள் அடித்த வீரர்கள்’ என்னும் பெருமையினை பெற பெரும் போட்டி எழுந்துள்ளது.


IPL போட்டியில் 200 சிக்ஸர்கள் எனும் மைல் கல்லை எட்ட இந்த 4 வீரர்களுக்கு இடையே இன்னும் சராசரியாக 30 சிக்ஸர்களுக்குள் மட்டுமே தேவைப்படுகிறது. 30 சிக்ஸ்ர்கள் என்படை வரும் IPL 2019 தொடரில் அனைவரும் எட்டிவிடுவர் என்ற போதிலும், இதில் யார் முதலில் எட்டப்போகிறார்கள் என்கிறதே ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இவர்களை தவிர பெங்களூரு அணியில் இடம்பெற்றவரும், கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணியில் இருக்கும் கிறிஸ் கெயில் 112 போட்டிகளில் 292 சிக்ஸர்களுடன் முதலிடத்தில் உள்ளார்.


இவரை தொடர்ந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தலைவர் மகேந்திர சிங் டோனி (175 போட்டிகள்), டிவில்லியர்ஸ் (141போட்டிகள்) 186 சிக்ஸர்கள் அடித்து 2-வது இடத்தில் உள்ளனர். 


இவர்களுக்கு அடுத்த இடத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் சுரேஷ் ரெய்னா 185 சிக்ஸர்களுடன் உள்ளார். 


அடுத்ததாக, மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைவர் ரோஹித் சர்மா 176 ஆட்டங்களில் 184 சிக்ஸர்கள் அடித்துள்ளார்.


இவரை தொடர்ந்து பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் தலைவர் விராட் கோலி 163  போட்டிகளில் விளையாடி, 178 சிக்ஸர்கள் அடித்துள்ளார். 


ஆதலால், இந்த சீசனில் 200 சிக்ஸர்கள் எனும் மைல்கல்லை எந்த வீரர் விரைவாக எட்டப் போகிறார் என்பதில்தான் பரபரப்பு எழுந்துள்ளது.


இதில் தோனி, ரெய்னா, டிவில்லியர்ஸ், ரோஹித் சர்மா ஆகியோர் ஏறக்குறைய ஒரு சிக்ஸர் இடைவெளியில் இருப்பதால், இவர்களுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது.