இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கவே டோனி-க்கு ஓய்வு -கோலி!
t20 தொடர்களில் ரிசாப் பன்ட்-க்கு வாய்பளிக்கவே டோனியின் பெயர் மேற்கிந்தியா, ஆஸ்திரேலியா தொடர்களில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக கோலி தெரிவித்துள்ளார்!
t20 தொடர்களில் ரிசாப் பன்ட்-க்கு வாய்பளிக்கவே டோனியின் பெயர் மேற்கிந்தியா, ஆஸ்திரேலியா தொடர்களில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக கோலி தெரிவித்துள்ளார்!
மேற்கிந்திய அணிக்கு எதிரான தொடரில் தற்போது விளையாடி வரும் இந்திய அணி டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரை எளிதாக வென்றது. இதனையடுத்து 3 t20 போட்டிகள் கொண்ட தொடரில் மேற்கிந்தியாவினை இந்தியா எதிர்கொள்கிறது.
இந்த தொடரில் இந்தியா சார்பில் பங்கேற்கும் வீரர்களின் பட்டியலினை கடந்த அக்டோபர் 26-ஆம் நாள் BCCI வெளியிட்டது. இந்த பட்டியலில் முன்னணி ஆட்டகாரர் டோனியின் பெயர் இடம்பெறவில்லை. அதேப்போல் அடுத்தமாதம் துவங்கவுள்ள ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரிலும் டோனியின் பெயர் இடம்பெறவில்லை.
சமீப காலமாக சரியான ஆட்டத்தினை வெளிப்படுத்தாத காரணத்தலே டோனியின் பெயர் நீக்கப்பட்டுள்ளதாக கிரிக்கெட் ரசிகர்கள் விமர்சனம் வைத்து வந்தனர். இந்திய அணி தலைமை பொறுப்பில் இருந்தும் இந்த விமர்சனங்களுக்கு மௌனம் காக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது இந்த விவகாரம் தொடர்பாக இந்திய கிரிக்கெட் அணி தலைவர் கோலி மௌனம் கலைத்துள்ளார்.
இதுதொடர்பாக கோலி தெரிவித்துள்ளதாவது.... ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து அணியில் விளையாடி வரும் டோனி எப்போதும் இளம் வீரர்களுக்கு வாய்ப்பளித்து வழிவிட்டு நிற்பவர். இதன் காரணத்தாலே தேர்வுக்குழுவும் இவரது பெயரினை வரும் t20 தொடர்களில் இருந்து நீக்கியுள்ளது என தெரிவித்தார்.
மேலும், தேர்வுகுழு இதுகுறித்து விளக்கம் ஏற்கனவே அளித்துள்ள நிலையில் தான் கருத்து தெரிவிக்க வேண்டாம் என ஒதுங்கியிருந்ததாவும், தற்போது டோனியின் திறமை குறித்து தவறான விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருவதாலே தனது மௌனத்தினை கலைத்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.