பொல்லார்டு இடத்தை நிரப்ப வந்த கேம்ரூன் கிரீன்! 2 ஆண்டுகளுக்கு முன்பே மும்பை போட்ட செம ஸ்கெட்ச்
பொல்லார்டு அணியைவிட்டு போனால் அவருக்கு பதிலாக யாரை எடுக்க வேண்டும் என்பதை 2 ஆண்டுகளுக்கு முன்பே மும்பை இந்தியன்ஸ் முடிவு செய்து வைத்திருந்து இப்போது தெரியவந்துள்ளது.
ஐபிஎல் மினி ஏலத்தில் 2வது அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்டிருக்கிறார் கேம்ரூன் கிரீன். இவரை ஏலத்தில் எடுக்க நடந்த கடும் போட்டியில் தட்டி தூக்கியிருக்கிறது மும்பை இந்தியன்ஸ் அணி. பொல்லார்டு இடத்துக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே கேம்ரூன் கிரீனை மும்பை இந்தியன்ஸ் அணி யோசித்து வைத்திருந்திருந்திருக்கிறது . அதனால், ஏலத்தில் அவர் வந்தால் நிச்சயம் எடுத்துவிட வேண்டும் என்பதில் தெளிவாக இருந்த மும்பை இந்தியன்ஸ் அணி, இந்த மினி ஏலத்தில் ஐபிஎல் ஏல வரலாற்றில் 2வது அதிக தொகையான 17.50 கோடிகளை கொட்டி தூக்கியிருக்கிறது.
பொல்லார்டு ஓய்வு
மும்பை இந்தியன்ஸ் தூண்களில் ஒருவராக இருந்த பொல்லார்டு அண்மையில் தன்னுடைய ஐபிஎல் ஓய்வை அறிவித்தார். அவருடைய ஓய்வை யாரும் எதிர்பார்க்காத நிலையில், உடனடியாக மும்பை இந்தியன்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். சுமார் 12 ஆண்டுகளுக்கும் மேலாக மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடிய பொல்லார்டு, அந்த அணி ஐபிஎல் மற்றும் சாம்பியன் லீக் கோப்பைகளை வெல்ல முக்கிய வீரராக இருந்தார்.
மேலும் படிக்க | IPL Mini Auction 2023: சாம்கரண் காட்டில் பண மழை! ஐபில் வரலாற்றில் புது உச்சம்
மும்பை இந்தியன்ஸ் ஸ்கெட்ச்
அவர் இப்போது ஓய்வு பெற்றுவிட்டதால், அந்த இடத்தை நிரப்ப சரியான ஆல்ரவுண்டர் மற்றும் அதிரடி பிளேயராக இருக்கும் ஒருவர் வேண்டும் என்பதில் கவனமாக இருந்துள்ளது. இதற்காக சரியான பிளயேரை எடுக்க வேண்டும் என 2 ஆண்டுகளுக்கு முன்பே ஸ்கெட்ச் போட்ட மும்பை இந்தியன்ஸ் அணி, ஆஸ்திரேலியாவின் கேம்ரூன் கிரீனை தொடர்ந்து கவனித்து வந்துள்ளது. இந்திய அணிக்கு எதிரான போட்டியில் சிறப்பாக விளையாடிய அவர், 20 ஓவர் போட்டிகளில் 150க்கும் மேல் ஸ்டைக்ரேட் வைத்திருக்கிறார்.
ஐபிஎல் மினி ஏலம் 2023
அவரை ஏலத்தில் எடுக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருந்த மும்பை இந்தியன்ஸ் அணி, இந்த மினி ஏலத்தில் அவரை 17.50 கோடிகளை கொட்டிக் கொடுத்து தன்வசப்படுத்தியுள்ளது. இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் 2வது அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட வீரர் என்ற கவுரம் கேம்ரூன் கிரீனுக்கு கிடைத்துள்ளது. மும்பை இந்தியன்ஸ் உரிமையாளர் ஆகாஷ் அம்பானி பேசும்போது, கேம்ரூன் கிரீனை எடுக்க வேண்டும் என 2 ஆண்டுகளுக்கு முன்பே முடிவு செய்துவிட்டோம். அவரை தொடர்ச்சியாக நாங்கள் கவனித்து வந்தோம். இப்போது மும்பை குடும்பத்தில் இணைந்திருக்கிறார் என மகிழ்ச்சியாக தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க | ஐபிஎல் ஏலத்தில் கிங் மேக்கர் இவர் தான்!... என்ன செய்யப்போகிறார்?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ