IPL 2023 MI vs KKR: மகளிர் அணியின் ஜெர்சியில் மும்பை இந்தியன்ஸ் - ஏன் தெரியுமா?
ஐபிஎல் தொடரில், கொல்கத்தா அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி, மகளிர் எம்ஐ அணியின் ஜெர்சியுடன் களமிறங்க உள்ளது.
IPL 2023 MI vs KKR: ஐபிஎல் தொடரில், கொல்கத்தா அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி, மகளிர் எம்ஐ அணியின் ஜெர்சியுடன் களமிறங்க உள்ளது.
IPL 2023 MI vs KKR: நடப்பு ஐபிஎல் தொடரின் 22ஆவது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் இன்று (ஏப். 16) மோதுகின்றன. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் இப்போட்டி மாலை 3.30 மணிக்கு தொடங்கும்.
இத்தொடரில் முதல் இரு போட்டியில் தோல்வியடைந்திருந்த மும்பை, தனது வெற்றி பயணத்தை தொடரவும், தொடரில் பல மாயாஜாலங்களை நிகழ்த்திவரும் கொல்கத்தா அதே மேஜிக்கை மீண்டும் நிகழ்த்தவும் இந்த போட்டியை எதிர்நோக்கி காத்திருக்கின்றன.
இந்நிலையில், ஐந்து முறை ஐபிஎல் சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்கள் இன்றைய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் தங்கள் மகளிர் அணியின் ஜெர்சியை அணிந்து விளையாடுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது மும்பை அணி உரிமையாளரின் முன்முயற்சியான அனைவருக்கும் கல்வி மற்றும் விளையாட்டின் (ESA - Education and Sports for All) ஒரு பகுதியாகும். இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டனான ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் மகளிர் அணி, இறுதிப் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸை வீழ்த்தி கடந்த மாதம் தொடக்க WPL கோப்பையை வென்றிருந்தது.
நாட்டில் உள்ள பெண் குழந்தைகளின் விளையாட்டை தங்களின் கேரியரராக எடுத்துக்கொள்ள ஊக்குவிக்கும் வகையில், மும்பை இந்தியன்ஸ் மகளிரணியின் ஜெர்ஸியை அணிந்து விளையாட உள்ளார்கள். இன்ஸ்டாகிராமில் மும்பை இந்தியன்ஸ் பகிர்ந்த ஒரு வீடியோவில், இஷான் கிஷன் ஞாயிற்றுக்கிழமை போட்டிக்கான புதிய ஜெர்சியை அன்பாக்ஸ் செய்வதைக் காணலாம்.
மும்பை - கொல்கத்தா போட்டியில் ரோஹித் சர்மா விளையாடவில்லை. சூர்யகுமார் யாதவ் கேப்டன் பொறுப்பை ஏற்றுள்ளார். மேலும், அர்ஜூன் டெண்டுல்கர் இப்போட்டியின் மூலம் ஐபிஎல் தொடரில் அறிமுகமாகிறார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ