LIVE Mumbai vs Delhi முதல் தகுதிச்சுற்று: டெல்லி அணி தடுமாற்றம்; மும்பை அபாரம்
இன்றைய முதல் தகுதிப் போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேபிடல்ஸ் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பந்து வீசத் தேர்ந்தெடுக்கப்பட்டதை அடுத்து, மும்பை இந்தியன்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 200 ரன்கள் எடுத்தது.
இன்றைய ஆட்டத்தின் நிலவரத்தை நேரலையில் காண CLICK செய்யவும்
9:48 PM 11/5/2020
டெல்லி கேபிடல்ஸ் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 12(8) ரன்கள் எடுத்து அவுட் ஆனார். இவரை ஜஸ்பிரீத் பும்ரா அவுட் செய்தார்.
9:35 PM 11/5/2020
முதல் ஓவரை போல்ட் வீசினார். ஒரே ஓவரில் இரண்டு விக்கெட்டை எடுத்தார். 2வது பந்தில் பிருத்வி ஷா, 5வது பந்தில் ராகனே அவுட் ஆனார்கள்.
அடுத்த ஓவரை வீசிய ஜஸ்பிரீத் பும்ரா, அதிரடி ஆட்டக்காரர் ஷிகர் தவானை அவுட் செய்தார். ரன் எதுவும் எடுக்காம்ல் மூன்று விக்கெட்டுக்களை டெல்லி அணி இழந்துள்ளது.
9:115 PM 11/5/2020
இன்றைய முதல் தகுதிப் போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேபிடல்ஸ் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பந்து வீசத் தேர்ந்தெடுக்கப்பட்டதை அடுத்து, மும்பை இந்தியன்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 200 ரன்கள் எடுத்தது.
7:11 PM 11/5/2020
இரு அணிகளிலும் விளையாடக்கூடிய வீரர்களின் நிலவரம்.
7:06 PM 11/5/2020
முதல் தகுதி போட்டியில் டெல்லி கேப்பிடல் (Delhi Capitals) அணி டாஸ் வென்றது. அந்த அணி முதலில் பீல்டிங்கை தேர்வு செய்ததால், மும்பை அணி இன்னும் சற்று நேரத்தில் ஆடவுள்ளது. இன்றைய ஆட்டம் இந்திய நேரபப்டி இரவு 7:30 மணிக்கு துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கும்.
ஐபிஎல் 2020 பிளேஆஃப்ஸ் சுற்று மும்பை vs டெல்லி: 2020 இந்தியன் பிரீமியர் லீக் (Indian Premier League) தொடரின் முதல் தகுதி போட்டி இன்று தொடங்குகிறது, அதாவது இன்று (நவம்பர் 5) மாலை 7:30 மணிக்கு துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்றைய ஆட்டம் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதிபெறும். அதே நேரத்தில், தோற்கும் அணிக்கு மற்றொரு வாய்ப்பு கிடைக்கும். எப்படி என்றால், நவம்பர் 6 ஆம் தேதி நடைபெறவிருக்கும் எலிமினேட்டர் (Eliminator) போட்டியில் வெற்றி பெறும் அணியுடன் மோதும்.
இந்த சீசனில் மும்பை இந்தியன்ஸ் (Mumbai Indians) இரண்டு முறையும் டெல்லி கேப்பிடல் (Delhi Capitals) அணியை தோற்கடித்தது. டெல்லிக்கு எதிராக அபுதாபியில் நடைபெற்ற போட்டியில் 5 விக்கெட் மற்றும் துபாயில் ஆடிய ஆட்டத்தில் 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
கிரிக்கெட் ஆடுகளம் யாருக்கு சாதகமாக இருக்கும்:
துபாய் கிரிக்கெட் மைதானத்தை பொறுத்தவரை பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக இருக்கும். இருப்பினும், விக்கெட் மெதுவாக இருப்பதால், சுழற்பந்து வீச்சாளர்களு பயன் கிடைக்கும். முதலில் டாஸ் வெல்லும் அணி பேட்டிங் தேர்வு செய்யலாம். போட்டியின் போது வெப்பநிலை 22 முதல் 33 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. போட்டியின் போது துபாயில் மழை பெய்ய வாய்ப்பில்லை என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வானிலை தெளிவாக இருக்கும்.
ALSO READ | IPL 2020: ஹெல்மெட் கட்டாயமாக்கப்பட வேண்டும் என ICCக்கு பரிந்துரைக்கும் சச்சின்
பிளேஆஃப் (Playoffs) சுற்றுக்களில் என்ன நடக்கிறது? எப்படி இறுதிப் போட்டிக்கு அணி தகுதி பெறுகிறது:
IPL லீக் போட்டியில் முதல் மற்றும் இரண்டாம் இடத்தை பிடிக்கும் அணிகளுக்கு தகுதி -1 இல் விளையாட வாய்ப்பு கிடைக்கிறது, மேலும் இந்த இரு அணிகளும் இறுதிப் போட்டிக்கு செல்ல இரண்டு வாய்ப்புகள் உள்ளன, மூன்றாவது மற்றும் நான்காவது இடத்தில் உள்ள அணிகள் இறுதிப் போட்டிக்கு செல்ல இரண்டு போட்டியில் வெல்ல வேண்டும்.
பிளேஆஃப்களில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மூன்றாவது இடத்தையும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் நான்காவது இடத்தையும் பிடித்தன. இந்த இரு அணிகளும் எலிமினேட்டர் போட்டியில் விளையாடும். இதில் வெல்லும் அணி தகுதி -2 இல் முதல் தகுதிப் போட்டியில் தோல்வியடைந்த அணியை எதிர்கொள்ளும்.
இரு அணிகளிலும் விளையாடுக்கூடிய 11 வீரர்கள் (சாத்தியமானவை):
மும்பை இந்தியன்ஸ்: ரோஹித் சர்மா (கேப்டன்), குயின்டன் டி கோக் (விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், ஹார்டிக் பாண்ட்யா, கீரோன் பொல்லார்ட், கிருனல் பாண்ட்யா, நாதன் குல்பர் நைல் / ஜேம்ஸ் பாட்டின்சன், ராகுல் சாஹர், ட்ரெண்ட் போல்ட், ஜஸ்பிரீத் பும்ரா.
டெல்லி கேப்பிடல்: ஸ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), பிருத்வி ஷா, ஷிகர் தவான், அஜிங்க்யா ரஹானே, ரிஷாப் பந்த் (விக்கெட் கீப்பர்), மார்கஸ் ஸ்டோயினிஸ், அக்ஷர் படேல், ஆர் அஸ்வின், டேனியல் சைம்ஸ், காகிசோ ரபாடா, என்ரிக் நோர்டே.