2-வது ஊக்க மருந்து சோதனை: நார்சிங் யாதவ் தோல்வி
ரியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்று இருந்த இந்திய மல்யுத்த வீரர் நார்சிங் யாதவிடம் நடத்தப்பட்ட பரிசோதனையில் அவர் தடை செய்யப்பட்ட ஊக்க மருந்தை பயன்படுத்தியது தெரியவந்தது. இதனால் இடைநீக்கம் செய்யப்பட்ட நார்சிங் யாதவ் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டது. இந்த நிலையில், நரசிங் யாதவிடம் நடத்தப்பட்ட இரண்டாவது சோதனையிலும் அவர் ஊக்க மருந்து பயன்படுத்தி உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஜூலை 5-ம் தேதி எடுக்கப்பட்ட ஏ மற்றும் பி ஆகிய இரு மாதிரிகளிலும் முதல் முறை நடத்தப்பட்ட சோதனையில் இருந்த மெட்டாடினியன் ஊக்க மருந்து இருந்தது உறுதியானது. இரண்டாவது சோதனையிலும் தோல்வியடைந்ததால், ஒலிம்பிக் வாய்ப்பு முடிவுக்கு வந்துள்ளது.
நர்சிங் யாதவுக்கு பதிலாக பர்வீன் ராணா ரியோ ஒலிம்பிக் போட்டிக்குத் தேர்வாகியுள்ளார்.