Nathan Lyon Injury: ஆஷஸ் சுற்றுப்பயணத்தில் நாதன் லியான் எதிர்வரும் போட்டிகளில் விளையாடுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாளான இன்று கையில் ஊன்றுகோலுடன் வந்தது ரசிகர்களை கவலையடைய செய்தது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நாதன் லயான் காலில் சதை பிடிப்பால் பாதிக்கப்பட்டதாக ஆஸ்திரேலிய அணி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இரண்டாவது டெஸ்டின் இரண்டாவது நாளான நேற்று (ஜூலை 29), பீல்டிங் செய்யும் போது எல்லைக்கு வெளியே ஓடியதால், நாதன் லயான் காயமடைந்தார். 35 வயதான அவர், காயத்தால் வலியில் துடித்து கண்ணீர்விட்டதாக தெரிந்தது.


இறுதியில் ஒரு அணி பணியாளரின் துணையுடன் பவுண்டரி லைனிலேயே நடந்து டிரஸ்ஸிங் அறைக்கு திரும்பினார். லியோன், தனது 100ஆவது தொடர்ச்சியான டெஸ்டில் விளையாடி வந்த நிலையில், இந்த கவலைக்கொள்ள வைக்கும் சம்பவம் நடந்தது. இன்று காலை லார்ட்ஸில் தனது அணி வீரர்களுடன் சேர்ந்து ஊன்றுகோல்களைப் பயன்படுத்தினார் மற்றும் சுருக்க சாக்ஸை அணிந்திருந்தார்.



மேலும் படிக்க | ஆசிய கோப்பையை வெல்ல இந்தியாவுக்கு இந்த படை தான் தேவை... உத்தேச அணி ஒரு பார்வை!


இப்போது அவர் லார்ட்ஸில் விளையாடுவது சாத்தியமில்லை என்று தோன்றுகிறது, அதே சமயம் ஹெடிங்லியில் நடக்கும் மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கு முன் மூன்று நாள் இடைவெளி என்பதால் அவர் அந்த போட்டியில் இடம்பெற்றால் குறிப்பிடத்தக்கதாக இருக்கும். 


"இந்தப் போட்டி முடிவடைந்த பிறகு அவருக்கு மறுவாழ்வு சிகிச்சை தேவைப்படும். தொடரின் எஞ்சிய போட்டிகளுக்கு அவர் கிடைப்பது குறித்த முடிவு ஆட்டத்தின் முடிவில் எடுக்கப்படும்" ஆஸ்திரேலிய பேட்டர் ஸ்டீவ் ஸ்மித் நேற்று ஆட்டம் முடிந்த பிறகு லியோனின் காயம் குறித்து கேட்டபோது கவலைப்பட்டார்.


ஆஸ்திரேலியாவில் பகுதி நேர சுழற்பந்து வீச்சாளர்கள் ஸ்மித், டிராவிஸ் ஹெட் மற்றும் மார்னஸ் லாபுசாக்னே ஆகிய மூவர் உள்ளனர் -- இப்போது லார்ட்ஸில் லயான் இல்லாததை மறைக்க வேண்டும். மூன்றாவது டெஸ்டில் லயான் வெளியேற்றப்பட்டால், ரிசர்வ் சுழற்பந்து வீச்சாளர் டோட் மர்பி ஹெடிங்லியில் அழைக்கப்படலாம். 


முன்னதாக வியாழனன்று, லயான் தனது 496வது டெஸ்ட் விக்கெட்டையும், தொடரின் ஒன்பதாவது விக்கெட்டையும் பெறுவதற்காக ஜாக் க்ராலியை வெளியேற்றினார். லார்ட்ஸில் லயானின் தோற்றம், தொடர்ந்து 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய ஆறாவது வீரராகவும், ஆலன் பார்டர் மற்றும் மார்க் வாவுக்குப் பிறகு மூன்றாவது ஆஸ்திரேலிய வீரராகவும் ஆனார். அவரது 496 டெஸ்ட் விக்கெட்டுகள் அவரை ஆல்-டைம் பட்டியலில் எட்டாவது இடத்தையும், சுழற்பந்து வீச்சாளர்களில் நான்காவது இடத்தையும் பிடித்தது.


லயானை விட அதிக டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய ஆஸ்திரேலியர்கள் ஷேன் வார்ன் மற்றும் கிளென் மெக்ராத் மட்டுமே. தற்போது ஆஷஸ் தொடரின் இரண்டாவது போட்டி நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்ஸில், ஆஸ்திரேலியா 416 ரன்களையும், இங்கிலாந்து 325 ரன்களையும் எடுத்தது. ஆஸ்திரேலியா அணி இரண்டாவது இன்னிங்ஸ் பேட்டிங்கை தொடங்கியுள்ளது. 


மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலியா அணி 130 ரன்களை எடுத்து 2 விக்கெட்டுகளை இழந்துள்ளது. மேலும், இங்கிலாந்தை விட 221 ரன்கள் முன்னிலையில் உள்ளது, இப்போட்டியில் இன்னும் இரண்டு நாள் ஆட்டங்கள் உள்ளன. இந்த ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலியா 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. 


மேலும் படிக்க | 2023 ஒருநாள் உலகக் கோப்பை அணியில் பும்ரா? அஷ்வின் சொன்ன முக்கிய தகவல்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ