ஆஷஸ் தொடர் முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி!
ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியை 251 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி முதல் வெற்றியை பதிவு செய்தது!
ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியை 251 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி முதல் வெற்றியை பதிவு செய்தது!
பரிமிங்ஹாமில் நடைபெற்ற இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையேயான போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 284 ரன்களும், இங்கிலாந்து அணி 374 ரன்களும் எடுத்தன.
இரண்டாவது இன்னிங்சில் ஸ்மித் 142 ரன்களும், வேட் 110 ரன்களும் எடுத்ததால், ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட்டுக்கு 487 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.
இதனைத்தொடர்ந்து 398 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து, ஆஸ்ரேலியாவின் நாதன் லயன், பேட் கம்மின்ஸ் ஆகியோரின் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறியது.
இறுதியில் இரண்டாவது இன்னிங்சில் இங்கிலாந்து அணி 146 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் ஆஸ்திரேலியா 251 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஆட்ட நாயகன் விருது ஸ்டீவன் ஸ்மித்துக்கு அளிக்கப்பட்டது.