புதுடெல்லி: பஞ்சாப் சாலை விபத்து தாக்குதல் வழக்கில் முன்னாள் கிரிக்கெட வீரர் நவ்ஜோத் சிங் சித்து குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

காங்கிரஸ் தலைமையிலான, பஞ்சாப் மாநில அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளவரும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான நவ்ஜோத் சிங் சித்து அவர்கள் கடந்த 1988-ஆம் ஆண்டு பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் சாலையில், குர்னம் சிங்(65) என்பவருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் அந்த முதிவயரை சித்து பலமாக தாக்கினார். இச்சம்பவத்தில் படுகாயமடைந்த குர்னம் சிங், சில நாட்களுக்கு பின் உயிரிழந்தார்.


இவ்வழக்கினை விசாரித்த கீழ் நீதிமன்றம், சித்துவை விடுவித்தது. எனினும் கடந்த 2007-ம் ஆண்டு பஞ்சாப் - ஹரியானா உயர் நீதிமன்றம் சித்துவை குற்றவாளி என அறிவித்தது. 


மேலும் அவருக்கு மூன்று ஆண்டு சிறைத் தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும் விதித்து உத்தரவிட்டது. 



இதனையடுத்து இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என கோரி உச்ச நீதிமன்றத்தில், சித்து மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்தார். உச்ச நீதிமன்ற நீதிபதிகள் செலமேஸ்வர், சஞ்சய் கிஷண் கவுல் ஆகியோர் அடங்கிய அமர்வு இம்மனு மீதான விசாரணையினை கடந்த மாதம் 14-ஆம் நாள் எடுத்துக்கொண்டது.


வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில் இன்று இவ்வழக்கின் தீர்ப்பு அறிவிக்கப்பட்டது. தீர்ப்பின்படி சித்து, IPC பிரிவு 323 மற்றும் பிரிவு 304(||) கீழ் குற்றவாளி என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது!