நெல்லை vs திருப்பூர்: இன்றைய TNPL லீக் போட்டியில் வெற்றி பெறுவது யார்?
Nellai vs Tiruppur: இன்றைய நெல்லை ராயல் கிங்ஸ் மற்றும் திருப்பூர் தமிழன்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியில் இரவு 7 மணிக்கு டாஸ் போடப்படும். சரியாக 7.30 மணிக்கு போட்டி ஆரம்பிக்கப்படும்.
Nellai vs Tiruppur: இன்றைய தமிழ்நாடு பிரீமியர் லீக் ஆட்டத்தில் என்.ஆர்.கே (Nellai Royal Kings) மற்றும் ஐ.டி.டி (IDream Tiruppur Tamizhans) அணிகள் மோதவுள்ளன. இன்று இரவு 7.30 மணிக்கு ஆட்டம் ஆரம்பமாகும். கடந்த 19 ஆம் தேதி முதல் டி.என்.பி.எல். தொடர் ஆரம்பமாகின. இதுவரை 9 போட்டிகள் முடிந்துள்ளன. அதில் இரண்டு போட்டிகளில் முடிவு எட்டப்படவில்லை. இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி பகிர்ந்தளிக்கப்பட்டது.
நெல்லை ராயல் கிங்ஸ் அணி, இதுவரை இரண்டு போட்டிகளில் விளையாடி உள்ளது. அதில் ஒன்று வெற்றி மற்றும் தோல்வியை தழுவியுள்ளது. அதேபோல் திருப்பூர் தமிழன்ஸ் அணி இரண்டு போட்டிகளில் பங்கேற்றது. அதில் ஒன்றில் தோல்வியும், மற்றொரு போட்டியில் முடிவு எட்டப்படவில்லை.
டி.என்.பி.எல். அட்டவணையை (TNPL Point Table) பொறுத்த வரை, நெல்லை அணி இரண்டு புள்ளிகளுடன் 6 வது இடத்திலும், திருப்பூர் அணி ஒரு புள்ளியுடன் கடைசி இடத்திலும் உள்ளது.
டிஎன்பிஎல் 5-வது சீசனில் 28 லீக் போட்டிகள், 4 பிளே-ஆப்கள், 1 பைனல் என மொத்தம் 33 போட்டிகள் நடைபெற உள்ளன. அதில் தற்போது லீக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. மேலும் கொரோனா தொற்று (Coronavirus) பரவாமல் இருக்க அனைத்து போட்டிகளும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடத்தப்படுகிறது.
ALSO READ | IPL 2021 மீதமுள்ள போட்டிகளுக்கான அட்டவணையை BCCI அறிவித்தது
இன்றைய நெல்லை ராயல் கிங்ஸ் மற்றும் திருப்பூர் தமிழன்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியில் இரவு 7 மணிக்கு டாஸ் போடப்படும். சரியாக 7.30 மணிக்கு போட்டி ஆரம்பிக்கப்படும். இந்தபோட்டி எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ளது.
நேற்று இரண்டு போட்டிகள் நடைபெற்றது. அதில் இரவு 7.30 மணிக்கு நடைபெற்ற 9 வது லீக் போட்டியில் லைகா கோவை கிங்ஸ் மற்றும் திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோதின. அதில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது. ஆட்ட நாயகன் விருது மணிபாரதிக்கு அளிக்கப்பட்டது.
ALSO READ | TNPL 2021: கோவை vs திண்டுக்கல்; 5 விக்கெட் வித்தியாசத்தில் திண்டுக்கல் வெற்றி
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR