என்னம்மா இப்படி பண்றீங்களே! சோமாலி தடகள வீராங்கனையின் அதிர்ச்சி தரும் வீடியோ
HORRENDOUS performance: உலகப் பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டிகளில் சோமாலிய ஓட்டப்பந்தய வீரரின் ஆட்டம் சிறிது நேரத்தில் வைரலாக பரவி பெரும் சீற்றத்தை ஏற்படுத்தியது.
புதுடெல்லி: திங்கட்கிழமை (ஜூலை 31), சீனாவின் செங்டுவில் நடந்த உலக பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டியில் பெண்களுக்கான 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் சோமாலிய வீராங்கனை ஒருவர் தனது மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சோமாலியாவைச் சேர்ந்த 20 வயதான நஸ்ரா அபுகர் அலி, 100 மீட்டர் ஹீட் ஓட்டத்தை 21.81 வினாடிகளில் ஓடி முடித்தார். அவரது ஒட்டுமொத்த செயல்திறன் மற்றும் உடற்தகுதி நிலை மற்ற போட்டியாளர்களுடன் ஒப்பிடக்கூடியதாக இல்லை.
நஸ்ரா அபுகர் அலி, வெற்றி பெற்ற வீராங்கனையை விட பத்து வினாடி100 மீட்டர் ஓடியது, அவரது தேர்வு குறித்த கேள்விகளையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த மோசமான ஓட்டத்தைப் பார்த்து நொந்துபோன சோமாலிய வர்ணனையாளர் எல்ஹாம் கராட், முன்பு ட்விட்டர் என்று அழைக்கப்பட்ட X இல் தனது வேதனையை பகிர்ந்துக் கொண்டார், "இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சகம் பதவி விலக வேண்டும். இது போன்ற ஒரு திறமையற்ற அரசாங்கத்தைப் பார்ப்பது வருத்தமளிக்கிறது. சோமாலியாவைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்கு பயிற்சி பெறாத ஒரு பெண்ணை அவர்கள் எவ்வாறு தேர்வு செய்தார்கள்? இது உண்மையிலேயே அதிர்ச்சியளிக்கிறது. சர்வதேச அளவில் நமது நாட்டைப் பற்றிய மோசமான பிம்பத்தை ஏற்படுத்துகிறது” என்று எக்ஸ் பதிவு கூறுகிறது.
நேபாட்டிசம் குற்றச்சாட்டுகள்
இந்த விவகாரம், சமூக ஊடக தளங்களில் பெரும் சீற்றத்தை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, சோமாலியாவின் இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சகம், நஸ்ரா அபுகர் அலியின் பங்கேற்பு குறித்து சொந்த விசாரணையை மேற்கொண்டது. சோமாலி தடகள சம்மேளனத்தின் தலைவி கதீஜா அடன் தாஹிரின் மருமகள் என்பதால், அலி விளையாட்டுகளில் பங்கேற்க தகுதி பெறவில்லை என்றாலும் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்று கூறப்படுகிறது.
இந்த விவகாரம் தொடர்பாக சோமாலியாவின் இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சகம், சோமாலியாவின் தேசிய ஒலிம்பிக் கமிட்டியின் நிர்வாகக் குழுவுடன் ஆரம்ப விசாரணைக் கூட்டத்தை மேற்கொண்டது. அதன் தொடர்ச்சியாக, சோமாலி தடகள சம்மேளனத்தின் தலைவி கதீஜா அடன் தாஹிர் இடைநீக்கம் செய்யப்பட வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
நஸ்ரா அபுகர் அலி, "விளையாட்டு வீராங்கனையாகவோ ஓட்டப்பந்தய போட்டியாளராகவோ தெரியவில்லை" மற்றும் தாஹிர் "அதிகார துஷ்பிரயோகம் மூலம் சர்வதேச அரங்கில் தேசத்தின் பெயரை இழிவுபடுத்தும் செயல்களில் ஈடுபட்டுள்ளார்" என்ற விசாரணை கூறுகிறது.
மேலும் படிக்க | ஆஷஸ் 2023 தொடர் யாருக்கும் வெற்றி தோல்வியின்றி டிராவில் முடிந்தது
"மேலும், சோமாலியாவின் தடகள சம்மேளனத்தின் தலைவர் மற்றும் சோமாலி பல்கலைக்கழக விளையாட்டு சங்கத்தை பொய்யாக்குவதற்கு காரணமான நபர்கள் இருவருக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கான தனது விருப்பத்தை இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சகம் உறுதியாக அறிவிக்கிறது" என்று அமைச்சர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனது தேர்வில் தனது உறவினரான தாஹிரின் தொடர்பு குறித்த அனைத்து கூற்றுகளையும் அலி மறுத்ததாக கூறப்படுகிறது. பல்கலைக்கழக போட்டிகளில் முதலிடம் பெற்றதால், தான் பந்தயத்தில் பங்கேற்றதாகக் கூறும் அவர், இனி எதிர் வரும் பந்தயங்களில் வலுவாக மீண்டெழுந்து முன்னேறுவேன் என்றும் 20 வயது இளைஞி நஸ்ரா அபுகர் அலி உறுதி கூறுகிறார்.
நியாயமற்றதோ அல்லது நியாயமான தேர்வோ எதுவாக இருந்தாலும் சரி, பெண்களுக்கான 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வீடியோவில் வைரலாகும் காட்சி, உலக பல்கலைக்கழக விளையாட்டுகளின் நம்பகத்தன்மையை கேள்விக்குள்ளாக்கியுள்ளது.
மேலும் படிக்க | IND vs WI: 3வது ஒருநாள் போட்டியிலும் விராட் கோலி இல்லை? வெளியான தகவல்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ