INDvsAUS: இந்தியா - ஆஸ்திரேலியா 3வது போட்டி தர்மசாலாவில் இருந்து மாற்றம்..! ஏன்?
தர்மசாலாவில் நடைபெற இருந்த இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3வது டெஸ்ட் போட்டிக்கான மைதானம் மாற்றப்பட்டுள்ளது. அந்த போட்டிக்கான மைதானம் விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது.
பாட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஆலன் பார்டர் கவாஸ்கர் தொடரில் பங்கேற்றுள்ளது. இவ்விரு அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை இந்திய அணி வீழ்த்தியது. இது ஆஸ்திரேலிய அணிக்கு மிகப்பெரிய தோல்வியாகவும் அமைந்தது.
ஆஸ்திரேலிய அணியில் முன்னணி பேட்ஸ்மேன்கள் மிகவும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். பந்துவீச்சிலும் ஆஸ்திரேலிய அணி எதிர்பார்த்த அளவுக்கு விளையாடவில்லை. இதனால், மிக மோசமான தோல்வியை அந்த அணி சந்திக்க வேண்டியிருந்தது. 5 நாட்கள் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட இந்தப்போட்டி 3 நாட்களுக்குள்ளாகவே முடிவடைந்தது கிரிக்கெட் ரசிகர்களுக்கே வியப்பாக இருந்தது. ஆஸ்திரேலிய அணி 91 ரன்களுக்கு ஆட்டமிழக்கும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. குறிப்பாக, அஸ்வின் மற்றும் ஜடேஜா ஆகியோர் இரு முனை தாக்குதல்களை துல்லியமாக தொடுத்தனர்.
மேலும் படிக்க | IND vs AUS: KL ராகுல் அணியில் எதற்கு? வெளுத்து வாங்கிய முன்னாள் வீரர்!
அவர்களின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் ஆஸ்திரேலிய அணியினர் சீட்டுக்கட்டுபோல் விக்கெட்டுகளை இழந்து வெளியேறினர். இந்த தோல்விக்கு பிராய்ச்சித்தம் தேடும் விதமாக அடுத்த போட்டியில் சிறப்பாக விளையாட வேண்டும் என்ற முனைப்பில் ஆஸ்திரேலியா இருக்கிறது. இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி டெல்லியில் பிப்ரவரி 17 ஆம் தேதி தொடங்குகிறது. அடுத்தபடியாக 3வது போட்டி மார்ச் 1 ஆம் தேதி தர்மசாலாவில் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் இப்போது அங்கு நடைபெற இருந்த போட்டி இடம்மாற்றம் செய்யப்பட இருக்கிறது. டெஸ்ட் போட்டியை நடத்துவதற்கு ஏதுவாக மைதானம் இன்னும் அமைக்கப்படவில்லை.
இதனால் வேறு இடத்துக்கு போட்டியை மாற்ற முடிவு செய்திருக்கும் பிசிசிஐ, எந்த மைதானம் என்பதை விரைவில் அறிவிக்க இருக்கிறது. இந்தூர், விசாகப்பட்டினம், புனே, பெங்களூரு உள்ளிட்ட மைதானங்கள் பிசிசிஐ பரிசீலனையில் இருக்கின்றன. ஆலன் பார்டர் - கவாஸ்கர் தொடரை பொறுத்தவரை இந்திய அணி 1-0 என முன்னிலை வகிக்கிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ