உலக கோப்பை இறுதி போட்டியில் நாளை நடைபெறவுள்ள நிலையில் நியூசிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் ஜிம்மி நீஷாம், இந்திய ரசிகர்களிடன் ஒரு விபரீத வேண்டுகோள் முன்வைத்துள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இங்கிலாந்தில் நடைப்பெற்று வரும் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் 2019-ன் இறுதி போட்டி நாளை லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது. இப்போட்டியில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதவுள்ளன. இந்நிலையில் இப்போட்டியை காண நுழைவு சீட்டு வாங்கியுள்ள இந்திய ரசிகர்கள், தங்களது நுழைவு சீட்டினை மறுவிற்பனை செய்யுமாறு ஜிம்மி நீஷாம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது., "அன்புள்ள இந்திய கிரிக்கெட் ரசிகர்களே. நீங்கள் இனியும் இறுதிப் போட்டிக்கு வர விரும்பவில்லை என்றால் தயவுசெய்து நீங்கள் பெற்றுள்ள இறுதி போட்டிக்கான நுழைவுச்சீட்டினை உலக கோப்பை கிரிக்கெட் அதிகாரப்பூர்வ இணையதளம் வழியாக உங்கள் டிக்கெட்டுகளை மறுவிற்பனை செய்யுங்கள். இது ஒரு பெரிய லாபத்தை ஈட்ட முயற்சிப்பதாக என எனக்குத் தெரியும், ஆதனால் தயவுசெய்து அதனை உண்மையான கிரிக்கெட் ரசிகர்களுக்கும் வாய்ப்பு கொடுங்கள்." என குறிப்பிட்டுள்ளார்.



புதன்கிழமை மான்செஸ்டரின் ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் நடைபெற்ற முதல் அரையிறுதி ஆட்டத்தில் இரண்டு முறை உலகக் கோப்பை சாம்பியனான இந்தியாவை நியூசிலாந்து வென்றது. விராட் கோலி தலைமையிலான அணி 9 போட்டிகளில் ஒரு தோல்வியுடன் தொடர் முழுவதும் ஒரு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது, எனினும் கேன் வில்லியம்சன் தலைமையிலான அணியின் பந்துவீச்சு தாக்குதலுக்கு முன்னால் அது வலுவான அணியாக சோபிக்க முடியவில்லை.


இந்தியாவின் மிகவும் போட்டிகரமான பேட்ஸ்மேன்கள் ரோஹித் சர்மா, விராட் கோலி, கே.எல்.ராகுல் ஆகியோர் எதிர்பார்த்ததை விட விரைவில் களத்தில் இருந்து வெளியேறினர். இருப்பினும், ரவீந்திர ஜடேஜா 59 பந்துகளில் 77 ரன்கள் குவித்து ஆட்டத்தை இந்தியாவின் பக்கம் கொண்டு வந்தார். எனினும் ஜடேஜாவின் ஆட்டம் அன்று இந்தியாவிற்கு கைகொடுக்கவில்லை என்பதே உண்மை.


மறுபுறம், இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது அரையிறுதி ஆட்டத்திலும் ஆஸ்திரேலியாவுக்கு இதேபோன்ற விதி இருந்தது. ஈயோன் மோர்கன் தலைமையிலான அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கான தங்களது இடத்தை உறுதி செய்தது. இந்நிலையில் நாளை இவ்விரு அணிகளும் கோப்பைக்கான இறுதிபோட்டியில் களம்காணவுள்ளது.