பிரபல கால்பந்து வீரர் நெய்மர், சாண்டோஸ் கிளப்பில் விளையாடிக் கொண்டிருந்தார். அந்த கிளப்பில் இருந்து 2013 ஆம் ஆண்டு விலகி பார்சிலோனாவுக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டார். இந்த ஒப்பந்தத்தில் முறைகேடுகள் இருப்பதாக அப்போதே புகார்கள் எழுந்தன. கிட்டதட்ட 9 ஆண்டுகளாக இந்த வழக்கு நடைபெற்று வருகிறது. நீண்ட விசாரணையில் இருக்கும் இந்த வழக்கு இறுதிக் கட்டத்தை எட்டியிருக்கிறது. நெய்மர் ஊழல் வழக்கு அக்டோபர் 17 ஆம் தேதி விசாரணைக்கு வர இருக்கிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | CWG 2022: காமன்வெல்த் போட்டிகளில் கலந்துக் கொள்ளும் இந்திய விளையாட்டு வீரர்கள்


கத்தாரில் நடைபெறும் பிஃபா உலகக்கோப்பைக்கு முன்பே விசாணையின் தீர்ப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. நெய்மர் மற்றும் அவரது தந்தை, சாண்டோஸ் கிளப்பின் நிர்வாகிகள் உள்ளிட்டோர் இந்த ஒப்பந்த முறைகேட்டில் ஈடுப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. விசாரணை துரிதமாக நடைபெறும்பட்சத்தில் அதிகபட்சம் 2 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்பட அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும், நெய்மர் மீது வழக்கு தொடர்ந்திருக்கும் கிளப், தண்டனை இன்னும் கடுமையாக இருக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறது. 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், இனிமேல் அவர் முழுவதுமாக கால்பந்து விளையாட தடை விதிக்க வேண்டும் என முறையிடப் போவதாக தெரிவித்துள்ளது. 


2013 ஆம் ஆண்டு பார்சிலோனா கிளப்புக்காக விளையாடத் தொடங்கிய நெய்மர், திடீரென அவர்களுடனான ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டு 2017 ஆம் ஆண்டு பிஎஸ்ஜி கிளப்புக்காக விளையாட தொடங்கினார். அவருடைய இந்த முடிவு கால்பந்து உலகில் அதிர்ச்சியாக பார்க்கப்பட்டது. அவரின் இந்த வெளியேற்றத்துக்குப் பிறகு வழக்கு விசாரணை சூடுபிடிக்கத் தொடங்கி, இறுதிக் கட்டத்தை எட்டியிருக்கிறது. ஒருவேளை ஒப்பந்த முறைகேடு வழக்கில் தண்டனை கிடைத்தால் நெய்மரின் கால்பந்து வாழ்க்கை மிகப்பெரிய பின்னடைவை சந்திக்கும். இது உலகளவில் இருக்கும் நெய்மர் ரசிகர்களுக்கு பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. 


மேலும் படிக்க | ஐசிசி 2022 டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ