IPL2022: பும்ரா மற்றும் நிதீஷ் ராணாவுக்கு அபராதம் விதித்த பிசிசிஐ
ஐபிஎல் ஒழுங்கு நடத்தை விதிமுறைகளை மீறியதால் நிதீஷ் ராணா மற்றும் பும்ராவுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
கொல்க்கத்தா மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டி புனேவில் நடைபெற்றது இப்போட்டியில் பாட் கம்மின்ஸ் அதிரடியால் கொல்கத்தா அணி அபார வெற்றியை பெற்றது. 16வது ஓவரில் மட்டும் கொல்கத்தா அணிக்கு 35 ரன்கள் கிடைத்தது. டேனியல் சாம்ஸ் வீசிய பந்தை சிக்சர்களாக பறக்கவிட்டு அசத்தினார் கம்மின்ஸ்.
மேலும் படிக்க | ஐபிஎல் போட்டியில் கலக்கும் கோலி - ரவிசாஸ்திரியால் ஓரங்கட்டப்பட்ட வீரர்
இதனால் ஆட்டநாயகன் விருதை கம்மின்ஸ் தட்டிச் சென்றார். போட்டிக்குப் பிறகு பேசிய ரோகித் சர்மா, இந்தப் போட்டியில் ஏற்பட்ட தோல்வியை என்னால் ஜீரணித்துக் கொள்ளவே முடியவில்லை என வெளிப்படையாக பேசினார். 15வது ஓவர் வரை வெற்றி பெற்றுவிடுவோம் என நினைத்துக் கொண்டிருந்தபோது, ஒரே ஓவரில் அதாவது 16வது ஓவரிலேயே கொல்கத்தா வெற்றி பெற்றது என்பதை கற்பனை செய்துகூட பார்க்க முடியவில்லை என புலம்பினார்.
இதனைத் தொடர்ந்து அப்போட்டியில் ஐபிஎல் ஒழுங்கு நடத்தை விதிமுறைகளை மீறியதற்காக பும்ரா மற்றும் நிதிஷ் ராணாவின் போட்டிக் கட்டணத்தில் இருந்து 10 % அபராதம் விதிக்கப்படுவதாக ஐபிஎல் நிர்வாக கமிட்டி அறிவித்துள்ளது. இருப்பினும், அவர்கள் செய்த நடத்தை விதிமீறல் அதிகாரப்பூர்வ ஐபிஎல் நிர்வாக கமிட்டி ஸ்டேட்மென்டில் இடம்பெறவில்லை. நிதிஷ் ராணா அவுட்டாகி வெளியேறியபோது, பவுண்டரி எல்லைக்கோடு அருகே இருந்த எல்இடி ஸ்கீரின் மீது பேட்டை ஓங்கி அடித்தார். அதற்காக அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டிருக்கலாம். ஆனால், பும்ரா என்ன செய்தார்? என்ற தகவல் வெளியிடப்படவில்லை.
போட்டி நடுவரின் முடிவின்படி இருவரும் லெவல் 1 குற்றத்தை செய்துள்ளனர். நடுவர் நடத்திய விசாரணையில் இருவரும் தங்களின் தவறை ஒப்புக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. இதுவரை நடைபெற்ற ஐபிஎல் போட்டிகளில் மும்பை அணி 3 தோல்விகளையும், கொல்கத்தா அணி புள்ளிப்பட்டியலில் முதல் இடத்திலும் உள்ளன.
மேலும் படிக்க | ஐபிஎல் 2022: ரெக்கார்டுடன் கொல்கத்தாவை வெற்றி பெறவைத்த கம்மின்ஸ் - மும்பை பரிதாபம்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR