ICC World Cup 2023: இந்திய அணி கடைசியாக ஓடிஐ உலகக் கோப்பையை கடந்த 2011ஆம் ஆண்டு தோனியின் தலைமையில் வென்றிருந்தது. மேலும், ஐசிசி கோப்பையையும் கடந்த 2013இல் (சாம்பியன்ஸ் டிராபி) தோனியின் தலைமையில் வென்றஇருந்தது. எனவே, சுமார் 10 ஆண்டு கால ஐசிசி கோப்பை தாகத்தை தணிக்கவும், மூன்றாவது முறையாக கோப்பையை வெல்லவும் இந்திய அணி (Team India) கடுமையாக போராடும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கச்சிதமான லைன்-அப்பில் இந்தியா


அந்த வகையில், நடப்பு உலகக் கோப்பை (ICC World Cup 2023) தொடரில் இந்திய அணி மீதும் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. காரணம் சொந்த மண்ணில் தொடர் நடக்கிறது என்பதால்தான். 2011ஆம் ஆண்டுக்கு முன்னர் வரை சொந்த மண்ணில் நடைபெற்ற உலகக் கோப்பை தொடர்களை அந்தந்த அணிகள் வென்றதில்லை. 2011ஆம் ஆண்டு முதல் கடந்த 2019ஆம் ஆண்டு வரையிலான மூன்று உலகக் கோப்பைகளையும், தொடரை நடத்திய அணிகளே வென்றிருக்கின்றன. 


அது ஒருபுறம் இருக்க இந்தியா நடப்பு உலகக் கோப்பையில் தனது முதல் மூன்று போட்டிகளிலும் (ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான்) வென்று தற்போது புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் கம்பீரமாக உள்ளது. இந்திய அணி அடுத்து இன்னும் நியூசிலாந்து (தரம்சாலா), இங்கிலாந்து (லக்னோ), தென்னாப்பிரிக்கா (கொல்கத்தா) ஆகிய அணிகளுடன் மோத இருக்கிறது. இருப்பினும், தற்போது இந்திய அணி சரியான காம்பினேஷனில் கச்சிதமாக இருக்கிறது. 


மேலும் படிக்க | இங்கிலாந்து தோல்வியால் அரையிறுதியில் இந்தியா...? - கூடுதல் குஷியில் ஆஸ்திரேலியா!


ஷர்துல் (அ) அஸ்வின்


ஓப்பனிங்கில் ரோஹித் - கில், மிடில் ஆர்டரில் விராட் - ஷ்ரேயாஸ் - கேஎல் ராகுல், பின்வரிசையில் ஹர்திக் பாண்டியா - ஜடேஜா என பேட்டிங்கில் கனக்கச்சிதமாக இருக்கிறது. பந்துவீச்சை பொருத்தவரை சுழலில் குல்தீப் யாதவும், வேகப்பந்துவீச்சில் சிராஜ் - பும்ரா ஆகியோரும் பொருத்தமாக உள்ளனர். இந்திய அணி 8ஆவது இடம் கேள்விக்கு உள்ளானாலும் அதில் சுழற்பந்துவீச்சு ஆல்-ரவுண்டராக அஸ்வினும், வேகப்பந்துவீச்சு ஆல்-ரவுண்டராக ஷர்துல் தாக்கூரும் இருக்கின்றனர். இருப்பினும், சிலர் ஷர்துல் இடத்தில் ஷமியை கொண்டு வர வேண்டும் எனவும் கருத்து தெரிவித்து வருகின்றனர். 


ஷிமிக்கு வாய்ப்பு?


இருப்பினும், இந்திய அணி அதன் காம்பினேஷனில் தொடர்ந்து ஒரே முடிவைதான் கொண்டுள்ளது. 8ஆவது இடத்தில் பேட்டிங் செய்ய இயலும் பந்துவீச்சாளரையே இந்திய அணி கேட்கிறது. அந்த வகையில், வேகப்பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளங்களில் ஷர்துலும், சுழற்பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளங்களில் அஸ்வினும அணியில் சேர்க்கப்படுவார்கள். இதில், சிராஜூக்கோ, பும்ராவுக்கோ ஒருவேளை ஓய்வு தேவைப்பட்டால் மட்டுமே ஷமி (Shami) அணிக்குள் வருவார் என தெரிகிறது. ஆனால், அது முக்கிய போட்டிகளில் நடைபெற வாய்ப்பில்லை. 


இந்த 2 வீரர்கள்


எனவே, இந்திய அணியில் இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ் (Suryakumar Yadav), ஷமி உள்ளிட்டோருக்கு வாய்ப்பு கிடைப்பது அரிது என பலரும் கருத்து தெரிவிக்கின்றனர். முதல் இரண்டு போட்டிகளை கில் தவறவிட்ட நிலையில், அவருக்கு பதில் இஷான் கிஷன் சேர்க்கப்பட்டார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டக்-அவுட்டானாலும், ஆப்கானிஸ்தான் போட்டியில் நல்ல பேட்டிங்கை வெளிப்படுத்தினார். இருப்பினும், பாகிஸ்தான் போட்டியில் கில் உடல் தகுதி பெற்றதால், அவர் வெளியேற்றப்பட்டார். 


சூர்யகுமார் மிடில் ஆர்டரில் மட்டுமே விளையாடுவார். ஆனால், இந்தியாவின் மிடில் ஆர்டரை மாற்ற இந்திய அணி நிர்வாகம் விரும்பவே விரும்பாது. இந்நிலையில்தான், இஷான் கிஷன் (Ishan Kishan), சூர்யகுமார் யாதவ், ஷமி ஆகியோருக்கான வாய்ப்பு குறைவு என கூறப்படுகிறது. இந்திய அணி தனது அடுத்த போட்டியை புனே மைதானத்தில் வங்கதேசத்துடன் வரும் அக். 19ஆம் தேதி விளையாடுவது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க | இந்திய அணியின் Luck Charm லார்ட் தாக்கூரின் சொத்து மதிப்பு என்ன தெரியுமா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ