ஐபிஎல் போட்டிகள் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்க உள்ள நிலையில் இப்போது இருந்தே எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. கடந்த வாரம் நடந்து முடிந்த ஐபிஎல் மெகா ஏலத்தில் ஒவ்வொரு அணியும் தங்களுக்கு வேண்டிய வீரர்களை ஏலத்தில் எடுத்துள்ளனர். சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் போன்ற அணிகள் தங்களது பழைய வீரர்களை மீண்டும் ஏலத்தில் எடுத்துள்ளனர். இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல்லில் பேட்டர்களின் ஆதிக்கம் அதிகம் இருந்தது. குறிப்பாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஐபிஎல்லில் 250 ரன்களுக்கு மேல் அடித்து சாதனை படைத்தது. அடுத்த ஆண்டும் இதே போல் தான் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இம்பாக்ட் பிளேயர் விதி வந்ததிலிருந்து பௌலர்களுக்கு ஐபிஎல்லில் மதிப்பே இல்லை என்று கூறப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஐபிஎல் ஏலத்தில் பலமான பேட்டிங் ஆர்டர் கொண்ட 3 அணிகளை பற்றி பார்ப்போம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | 2ஆவது டெஸ்டிலும் இந்த வீரர் விளையாட மாட்டார்... ஆனால் இந்திய அணிக்கு பிரச்னை இல்லை!


சன்ரைசர்ஸ் ஹைதராபாத்


ஹென்ரிச் கிளாசென், இஷான் கிஷன், டிராவிஸ் ஹெட், அபிஷேக் ஷர்மா போன்ற வீரர்களை சன்ரைசர்ஸ் அணி டாப் ஆர்டரில் வைத்துள்ளனர். மேலும் மிடிலில் நிதிஷ் ரெட்டி போன்ற இளம் வீரர்கள் உள்ளனர். ஐபிஎல் 2024ல் டிராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் ஷர்மா கூட்டணி என்ன செய்தது என்பதை மறக்க வேண்டாம். 6 ஓவரில் 100 ரன்கள், 120 ரன்கள் என அடித்து சாதனை படைத்தனர். பிறகு களமிறங்கிய கிளாசெனும் தன் பங்கிற்கு அதிரடி காட்டினார். இந்த கூட்டணியில் தற்போது இஷான் கிஷனும் சேர்ந்து இருப்பது தாக்குதலை அதிகப்படுத்தி உள்ளது. ஐபிஎல் 2024ல் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஒரு திடமான பேட்டிங் வரிசையை கொண்டு இருந்தது. அதன் மூலம் பைனல் வரை சென்று கோப்பையை தவற விட்டனர். ஐபிஎல் 2025ல்லும் அதிரடி தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


கொல்கத்தா நைட் ரைடர்ஸ்


ஐபிஎல் 2024ல் சால்ட் மற்றும் நரேன் அதிரடியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் பல சாதனைகளை படைத்தது. இதன் மூலம் கோப்பையையும் கைப்பற்றி உள்ளனர். கடந்த சீசனில் கேகேஆர் அணிக்கு மிடில் ஆர்டர் தான் பிரச்சனையாக இருந்தது. இந்த ஏலத்தில் அதனை சரி செய்துள்ளனர். வெங்கடேஷ் அய்யர், ரஹ்முல்லா குர்பாஸ், ரிங்கு சிங், ஆண்ட்ரே ரசல், குயின்டன் டி காக், அஜிங்க்யா ரஹானே மற்றும் அன்க்ரிஷ் ரகுவன்ஷி என அதிரடி பேட்டிங் லைன்அப்பை வைத்துள்ளது கொல்கத்தா நைட் ரைடர்ஸ். சென்னை அணியில் சிறப்பாக விளையாடிய ரஹானே கேகேஆர் அணியில் தற்போது இணைந்துள்ளார். அதே சமயம் குயின்டன் டி காக்கின் பேட்டிங் கூடுதல் வலு சேர்க்கிறது. ஐபிஎல் 2025ன் சிறந்த பேட்டிங் ஆர்டரில் கேகேஆர் அணியும் உள்ளது.


டெல்லி கேபிட்டல்ஸ்


டெல்லி கேபிட்டல்ஸ் அணியில் இருந்து ரிஷப் பந்த் விலகி இருந்தாலும் தற்போது ஜேக் ஃப்ரேசர்-மெக்குர்க், கேஎல் ராகுல், ஃபாஃப் டு பிளெஸ்ஸிஸ், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், ஹாரி புரூக் போன்ற வீரர்கள் இணைந்துள்ளனர். இந்த பேட்டிங் வரிசை எதிரணிக்கு நிச்சயம் பயத்தை ஏற்படுத்தும். ஒருவர் இல்லை என்றாலும் இன்னொருவர் கை கொடுக்கும் வகையில் சிறப்பான பேட்டிங் ஆர்டரை வைத்துள்ளது டெல்லி கேபிட்டல்ஸ். மேலும், மிடில் ஆர்டரில் அக்சர் படேல் போன்ற வீரர்களும் பங்களிக்க கூடும். டி20 உலக கோப்பையில் சிறப்பாக பேட்டிங் செய்து இருந்தார் அக்சர் படேல். எனவே பேட்டிங்கில் இந்த முறை டெல்லி கேபிட்டல்ஸ் வலுவாக மாறி உள்ளது.


மேலும் படிக்க | டி20 உலக சாதனை சதம், ஐபிஎல் ஏலத்தில் யாரும் எடுக்கவில்லை - உர்வில் படேல் யார்?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ