மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்ற ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் இறுதிப் போட்டியில் தனது வெற்றியை பதிவு செய்தார் Novak Djokovic. இறுதிப் போட்டியில் டேனியல் மெட்வெடேவை (Daniil Medvedev) வீழ்த்தி, மொத்தம் 18 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற சாதனையை படைத்தார் நோவாக் ஜோக்கோவிக்.
 
ஒரு மணி நேரம் 53 நிமிடங்கள் நீடித்த போட்டியில், முதல் நிலை வீரரான ஜோகோவிச் ஞாயிற்றுக்கிழமை 7-5, 6-2, 6-2 என்ற நேர் செட்களில் மெட்வெடேவை வீழ்த்தினார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உலகின் நம்பர் 1 டென்னிஸ் வீரரான நோவக் ஜோகோவிச் ஞாயிற்றுக்கிழமை மெல்போர்னின் ராட் லாவர் அரங்கில் சாதனை படைத்தார். ரஷ்யாவின் டேனியல் மெட்வெடேவை நேர் செட்களில் வீழ்த்தி, ஒன்பதாவது ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை வென்றார். 


Also Read | 5000 ஆண்டு பழமையான, 22,400 லிட்டர் பீர் உற்பத்தி தொழிற்சாலை கண்டுபிடிப்பு


COVID-19 தொற்று ஏற்படுத்திய நிச்சயமற்ற தன்மையால் வழக்கமாக இருக்கும் பரபரப்பு இல்லை. போட்டியின் க்ளைமாக்ஸில், ஜோகோவிச் வெல்லமுடியாத சக்தியாக உருவெடுத்த ஜோகோவிச் ஒன்பதாவது ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை வென்றார்.   


முதல் நிலை வீரரான ஜோகோவிச் இப்போது சுவிஸ் வீரர் ரோஜர் பெடரர் மற்றும் ஸ்பெயினின் ரஃபேல் நடாலின் சாதனைகளை சமன் செய்தார். மொத்தம் 20 முக்கிய வெற்றிகளில் இருவர். 


25 வயதான மெட்வெடேவைப் பொறுத்தவரை, 2020 நவம்பரில் தொடங்கி 20 போட்டிகளில் வெற்றிபெற்றுள்ளார்.  லண்டனில் நடந்த ஏடிபி இறுதிப் போட்டியில் ஜோகோவிச்சிற்கு எதிராக விளையாடி வெற்றி பெற்றதையும் குறிப்பிட்டுச் சொல்லலாம்.


Also Read | India-Pakistan war 50 ஆண்டு நிறைவடைவு, கோவையில் விமான சாகசக் காட்சிகள்  


2019ஆம் ஆண்டின் அமெரிக்க ஓபன் டென்னிஸ் இறுதிப் போட்டியில் நடாலிடம் தோல்வியடைந்தார். இரண்டாவது கிராண்ட்ஸ்லாம் இறுதிப் போட்டியில் தற்போது மெட்வடேவ் ஜோகோவிச்சிடம் வீழ்ந்தார்.


தனது 30 வயதிற்குப் பிறகு ஆறு கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார் என்பது ஜோகோவிச்சின் உடல் தகுதிக்கு சான்றாக உள்ளது.


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR