தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உலக கோப்பை கிரிக்கெட் தொடர் 2019-ன் 30-வது லீக் ஆட்டம் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைப்பெற்றது. இப்போட்டியில் பாகிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதின.


இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட்டி செய்வதாக அறிவித்தது. இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்த, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 308 ரன்கள் குவித்தது. அணியில் அதிகபட்சமாக ஹாரிஸ் ஷோஹைல் 89(59) ரன்கள் குவித்தார். பாபார் ஆஜம் 69(80), பகர் ஜாமன் 44(50), இமாம் உல் ஹக் 44(58) ரன்கள் குவித்தனர். தென்னாப்பிரிக்கா தரப்பில் லுங்கி நெகிடி 3 விக்கெட் வீழ்த்தினார்.


இதனையடுத்து 309 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென்னாப்பிரிக்கா களமிறங்கியது. துவக்க வீரராக களமிறங்கிய ஆம்லா 2(3) ரன்களில் வெளியேறி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினார். இவரை தொடர்ந்து வந்த வீரர்களும் சொற்ப ரன்களில் வெளியேற தென்னாப்பிரிக்கா நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 259 ரன்கள் மட்டுமே குவித்தது.


அணியில் அதிகப்பட்சமாக டூப்ளசிஸ் 63(79) ரன்கள் குவித்தார். குவிண்ட் டீ காக் 47(60), ஆண்டிலே பெலெக்குவுவோ 46(32) ரன்கள் குவித்தார். பாகிஸ்தான் தரப்பில் வாஹக் ரியாஜ், சாதப் கான் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.



இப்போட்டியில் பெற்ற தோல்வியின் மூலம் தென்னாப்பிரிக்கா அணி உலக கோப்பை பெறும் வாய்ப்பை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இனி வரும் போட்டிகளில் வெற்றி பெற்றாலும் தென்னாப்பிரிக்கா அணியில் தகுதி சுற்றுக்கு இடம் பெற இயலும் என்பது கேள்விக்குறியே ஆகும்.