2020-ஆம் ஆண்டு ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடரை நடத்தும் உரிமையை பாகிஸ்தான் பெற்றுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த அறிவிப்பினை வங்கதேச தலைநகர் தாகா-வில் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவர் நாஸ்முல் ஹாசன் பாப்பான் வெளியிட்டுள்ளார். எனினும் போட்டிகள் எங்கு நடைப்பெறும் என்ற அறிவிப்பினை வெளியிடவில்லை.


செப்டம்பர் 2020-க்கு திட்டமிடப்பட்டுள்ள இந்த தொடர் 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளாக நடைபெறும் எனவும், 2020-ஆம் ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள ICC T20 உலக கோப்பை போட்டிகளுக்கு முன்னதாக நடத்தப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.



சமீபத்தில் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற்ற ஆசிய கோப்பை 50 ஓவர் கிரிக்கெட் தொடர் இந்தியாவில்தான் நடைபெறுவதாக இருந்தது. பாகிஸ்தான் இந்தியா வர மறுப்பு தெரிவித்ததால் அரபு அமிரகத்திற்கு மாற்றப்பட்டது.


இந்நிலையில் தற்போது 2020 ஆசிய கோப்பை தொடர் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தியா - பாக்கிஸ்தான் நாடுகளுக்கு இடையே நிலவும் பிரச்சணைகளுக்கு மத்தியில், இந்த தொடரை நடத்தும் உரிமையை பாகிஸ்தான் பெற்றுள்ளது. எனவே இத்தொடரின் போட்டிகள் ஐக்கிய அரபு அமிரகத்தில் நடைபெற வாய்ப்புள்ளாதக தகவல்கள் தெரிவிக்கின்றன.