ஏய் உனக்கு மூளை இருக்கா? ராகுல் டிராவிடை விமர்சிக்கும் பாசித் அலி மீது விமர்சனம்
World Test Championship Final Criticism: இந்தியப் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் `பூஜ்யம்` ஆகிவிட்டார் என்றும் அவர் `மூளையற்றவர்` என்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் விமர்சித்திருப்பது சர்ச்சைகளை ஏற்படுத்தியிருக்கிறது
WTC Final 2023: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் மூன்று நாட்கள் விளையாடிய பிறகு, ஆஸ்திரேலியா இரண்டாவது இன்னிங்ஸில் 296 ரன்கள் முன்னிலை மற்றும் 6 விக்கெட்டுகள் மீதமுள்ள நிலையில் வெற்றி பெறும் என்று உறுதியாக நம்புகிரது. முதல் நாள் டாஸ் வென்றதைத் தவிர, இந்த டெஸ்ட் போட்டியில் இந்தியாவுக்கு எதுவும் சரியாக நடக்கவில்லை.
போட்டியில், டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோஹித் ஷர்மா பந்துவீச்சைத் தேர்வு செய்தார், ஆனால் முதல் நாளில் மேகமூட்டமான சூழ்நிலை இந்திய அணிக்கு பாதகமாகவே இருந்தது. கோப்பையை வெல்லும் இறுதி சந்தர்ப்பத்தை இந்தியா சரியாகப் பயன்படுத்தத் தவறிவிட்டதாக பலரும் விமர்சித்தனர்.
அதில், பாகிஸ்தானின் முன்னாள் பேட்டர் பாசித் அலியின் விமர்சனம் கடுமையாக இருந்தது. ஆட்டத்தின் முதல் இரண்டு மணி நேரம் இந்தியாவுக்கு பின்னடைவை ஏற்படுத்தியதாக அவர் கருத்து தெரிவித்துள்ளார். பந்துவீச்சும் டெஸ்ட் போட்டியின் தரத்திற்கு இல்லை என்றும் மேலும் ஐபிஎல் போன்றே இருந்தது என்றும் அவர் கூறினார்.
"முதல் இரண்டு மணிநேரம் பற்றி கவலைப்பட்டு பந்துவீசத் தேர்ந்தெடுத்த தருணத்தில் இந்தியா போட்டியை இழந்தது. மேலும் ஐபிஎல் போன்ற பந்துவீச்சு நிலையையே, டெஸ்ட் போட்டியில் பார்க்க முடிந்தது. மதிய உணவு இடைவெளியின் போது, இந்திய பந்துவீச்சாளர்கள் போட்டியில் வென்றது போல் மிகவும் மகிழ்ச்சியாகத் தோன்றினர்.
இப்போது இந்தியா செய்யக்கூடியது, நான்காவது இன்னிங்ஸில் ஒரு அதிசயம் நடக்கும் என்ற நம்பிக்கையுடன் இருப்பது மட்டுமே, என்று பாசித் அலி தெரிவித்தார். மேலும், இந்தியா களமிறங்கிய 120 ஓவர்களில், ரஹானே, கோஹ்லி மற்றும் ஜடேஜா ஆகிய 2-3 வீரர்கள் மட்டுமே ஃபிட்டாக இருப்பதை என்னால் பார்க்க முடிந்தது. என்று முன்னாள் பாகிஸ்தான் வீரர் தனது யூடியூப் சேனலில் கூறினார்.
மேலும் படிக்க | சாரா அலி கானா? சாரா டெண்டுல்கரா? குழப்பத்தில் சுப்மன் கில் ரசிகர்கள்!
பாகிஸ்தானுக்காக 19 டெஸ்ட் மற்றும் 50 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய பாசித் அலி, இந்திய பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டையும் விமர்சித்தார், அவரை ஒரு சிறந்த பேட்ஸ்மேன் ஆனால் பயிற்சியாளராக அவர் 'பூஜ்யம்' என்று அழைத்தார்.
"நான் ராகுல் டிராவிட்டின் மிகப்பெரிய ரசிகன், அவரது ரசிகனாகவே எப்போதும் இருப்பேன். அவர் கிரிக்கெட் வீரராக கிளாஸ் பிளேயர், ஜாம்பவான். ஆனால் பயிற்சியாளராக, அவர் பூஜ்ஜியம். நீங்கள் இந்தியாவைத் திருப்பும் ஆடுகளங்களைத் தயாரித்தீர்கள். அவர் என்ன நினைக்கிறார் என்பது கடவுளுக்குத் தான் தெரியும்" என்று பாசித் அலி, ராகுலை கடுமையாக விமர்சித்தார்.
ஆஸ்திரேலியாவின் முதல் இன்னிங்ஸ் 469 ரன்களுக்கு பதிலுக்கு இந்தியா 296 ரன்களுக்கு ஆட்டமிழந்தது குறிப்பிடத்தக்கது. ஆஸ்திரேலியா 3-வது நாள் ஆட்ட நேர முடிவில் தனது இரண்டாவது இன்னிங்சில் 4 விக்கெட் இழப்புக்கு 123 ரன்கள் எடுத்தது.
மேலும் படிக்க | WTC Final: கோப்பை ஆஸ்திரேலியாவுக்கு தானா... இந்தியாவின் வெற்றிக்கு வழி என்ன?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ