2023 ஆம் ஆண்டு ஆசிய கோப்பை பாகிஸ்தானில் நடைபெற இருக்கும் நிலையில், அது பொதுவான இடத்தில் நடத்தப்படும் என பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தை கடுப்பேற்றியுள்ளது. ஜெய்ஷாவின் கருத்துக்கு பதிலடியாக இந்தியாவில் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் 50 ஓவர் உலக கோப்பையில் பாகிஸ்தான் பங்கேற்காது என பிசிசிஐ-க்கு அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் பதிலடி கொடுத்துள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | பிசிசிஐ-ல் அடுத்த அதிரடி: இவங்க பதவி எல்லாம் கூண்டோட காலியாக போகுது


மும்பையில் ஆண்டுதோறும் நடைபெறும் பிசிசிஐ பொதுக்கூட்டத்திற்கு, உறுப்பினர்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதில் அடுத்த ஆண்டு பாகிஸ்தானில் நடைபெற இருக்கும் ஆசியகோப்பை கிரிக்கெட் போட்டியை பொது இடத்தில் நடத்த திட்டமிட்டிருக்கிறோம் என ஜெய்ஷா தெரிவித்துளார். இதற்கான காரணத்தையும் அவர் அதில் குறிப்பிட்டுள்ளார். அதாவது கடந்த காலங்களில் நடந்த கசப்பான நிகழ்வுகளின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 2008 ஆம் ஆண்டு ஆசியக் கோப்பைக்குப் பிறகு இந்தியா பாகிஸ்தானுக்குச் செல்லவில்லை.


அதே ஆண்டு நவம்பர் 26 அன்று மும்பை பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, 2009 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் திட்டமிடப்பட்ட இருதரப்புத் தொடர் ரத்து செய்யப்பட்டது. இது மட்டுமில்லை, லாகூரில் இலங்கை அணி பேருந்து பயங்கரவாதிகளால் தாக்கப்பட்டது மற்றொரு காரணமாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிகழ்வுக்குப் பிறகு கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக எந்தவொரு வெளிநாட்டு அணியும் பாகிஸ்தானுக்கு செல்லவில்லை. இந்தியா - பாகிஸ்தான் அணிகள் பல்வேறு ஐசிசி மற்றும் ஏசிசி போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளன.


பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறும்போது, " PCB இப்போது கடினமான முடிவுகளை எடுக்க தயாராக உள்ளது. ஆசிய கோப்பையில் பாகிஸ்தானில் இந்தியா வந்து விளையாடாவிட்டால், இந்தியாவில் நடைபெறும் 50 ஓவர் உலக கோப்பையில் பாகிஸ்தான் பங்கேற்காது எனும் முடிவில் இருக்கிறோம். அதேநேரத்தில் இப்போதைக்கு எங்களால் எதுவும் சொல்ல முடியாது. மெல்போர்னில் நடைபெறும் ஐசிசி வாரியக் கூட்டத்துக்குப் பிறகு இது குறித்து அறிவிப்பு வரும்" எனத் தெரிவித்துள்ளார்.


மேலும் படிக்க | டி20 உலகக்கோப்பையில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய தமிழர்...!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ