9-வது புரோ கபடி லீக் போட்டிகள் விரைவில் நடைபெற உள்ளன. 12 அணிகள் பங்கேற்கும் இப்போட்டியில், 5வது சீசனில் சென்னையை மையமாக கொண்டு உதயமான தமிழ் தலைவாஸ் அணியும் களமாடுகிறது. சில்லர் சகோதரர்கள் , ராகுல் சவுதாரி, அஜய் தாக்கூர் உள்ளிட்ட பல பிரபல முகங்களை கொண்ட இந்த அணி, கடந்த நான்கு சீசன்களில் ஒருமுறை கூட பிளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெறவில்லை


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆனால், இம்முறை தமிழ் தலைவாஸ் அணியின் நிர்வாகம் ஒரு வலுவான அணியைக் கட்டமைத்துள்ளது. இளம் மற்றும் அனுபவ வீரர்களை கொண்ட சம பலம் பொருந்திய அணியாகவும் உள்ளது. சாகர், அஜிங்க்யா பவார், அபிஷேக் எம், ஹிமான்ஷு, ஹிமான்ஷு சிங், மோஹித், ஆஷிஷ், சாஹில், ஜதின், நரேந்தர், பவன் ஷெராவத், தனுஷன் லக்ஷ்மமோகன், எம்டி. ஆரிப் ரப்பானி, விஸ்வநாத் வி, அர்பித் சரோஹா, கே அபிமன்யு, மற்றும் அங்கிட் போன்றோர் அடங்கிய ஒரு வலுவான அணி உருவாகியுள்ளது.



இப்போட்டிக்காக மும்பையில் ஆகஸ்ட் 5 மற்றும் 6-ம் தேதிகளில் நடந்த ஏலத்தில், தமிழ் தலைவாஸ் அணி அதிரடியாக வீரர்களை வாங்கிச் சேர்த்தது. இதில், பவன் குமார் ஷெராவத்தை தமிழ் தலைவாஸ் அணி ரூ. 2.26 கோடிக்கு ஒப்பந்தம் செய்தது. பிகேஎல் வரலாற்றில் இது மிகவும் விலையுயர்ந்த ஒப்பந்தம் ஆகும். மேலும், அவரையே அணியின் கேப்டனாகவும் நியமிக்க தமிழ் தலைவாஸ் அணி முடிவு செய்துள்ளது.


மேலும் படிக்க | அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பை ரத்து செய்தது FIFA!


யார் இந்த பவன் ஷெராவத்?


புரோ கபடி லீக்கின் கடந்த மூன்று சீசன்களிலும் பவன் குமார் ஷெராவத் நம்பர் ஒன் ரைடராக திகழ்ந்து வருகிறார். அவர் புரோ கபடியின் 3-வது சீசனில் பெங்களூரு புல்ஸ் அணிக்காக அறிமுகமானார். 2 சீசன்களுக்குப் பிறகு, 5-வது சீசனில் அவரை குஜராத் பார்ச்சூன் ஜெயண்ட்ஸ் அணிக்காக விளையாடினார்.பின்னர், மீண்டும் 6-வது சீசனில் தனது சொந்த அணியான பெங்களூரு புல்ஸ் அணிக்குத் திரும்பினார்.



பெங்களூரு புல்ஸ் அணியின் முடிசூடா மன்னாகத் திகழ்ந்த அவருக்கு “ஹை-ஃப்ளையர்” என்ற செல்லப்பெயரை ரசிகர்கள் சூட்டினர். களத்தில் பாய்ந்து, பறந்து, சுழன்ற அவரின் அசத்தல் ஆட்டத்தால் 2018-ம் ஆண்டில் புகழின் உச்சத்திற்கே சென்றார் பவன். அந்த சீசனில் அவரது தலைமையிலான அணி, புரோ கபடி லீக் கோப்பையை முதல்முறையாக வென்றது. அவர் சீசனின் சிறந்த ரைடராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். மொத்தம் 24 போட்டிகளில் விளையாடிய பவன், 282 ரெய்டு புள்ளிகளைப் பெற்றார். 


2021 ஆம் ஆண்டில், பெங்களூருவின் அற்புதமான ஃபார்முக்குப் பின்னால் பவன் ஒரு தனிக் காரணமாக இருந்தார். அங்கு அவர் 24 போட்டிகளில் விளையாடி 304 புள்ளிகளைக் குவித்தார். இது ஒரு வீரரின் அதிகபட்ச புள்ளிகள் இருந்தது. இதில் ஒரே ஆட்டத்தில் அவர் 27-புள்ளிகள் பெற்றார். அந்த ஆட்டத்தில் தபாங் டெல்லியை 61-22 என்ற கணக்கில் திகைக்க வைத்தனர் பெங்களூரு புல்ஸ்.


புரோ கபடி லீக்கில் மட்டும் அல்லாது அண்மையில் நடந்த உள்நாட்டு போட்டியில் கூட பவன்குமார் ஷெராவத் தலைமையிலான இந்திய ரயில்வே அணி, தேசிய சாம்பியன்ஷிப்யை வென்றது. தவிர ஏற்கனவே 2 சாம்பியன்ஷிப்யையும் வென்றெடுத்துள்ளது.


2019 -ம் ஆண்டு தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்ற இந்திய அணியில் ஒரு பகுதியாக இருந்த பவன், சர்வதேச அரங்கில் தனது திறனை வெளிப்படுத்தி இருந்தார். மேலும், அவர் அணியின் துணை கேப்டனாகவும் இருந்தார். இப்படி தான் களமாடும் அணிகளில் அசைக்க முடியா தூணாக வலம் வரும் அவர், இந்த சீசனில் தமிழ் தலைவாஸ் அணிக்காக களமிறங்க காத்திருக்கிறார். அவரின் சாதனைப் பட்டியல்களைப் பார்க்கும்போது அவர் தமிழ் தலைவாஸின் முதுகெலும்பாக திகழ்வார் என்கிற நம்பிக்கை ரசிகர்கள் மனதில் துளிர் விடுகிறது.


மேலும் படிக்க | ஓய்வை அறிவித்து 2 ஆண்டுகள் நிறைவு! தோனியின் எதிர்கால குறிக்கோள்கள்!


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ