புதுடெல்லி: பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பாஸ்டனில் 2023 முதல் ஆஷஸ் டெஸ்ட் போட்டியின் 2வது நாளில் இங்கிலாந்தின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட், புரவலர்களுக்கு மிகவும் வெற்றிகரமான பந்துவீச்சாளராக இருந்தார். அவர் டேவிட் வார்னர் மற்றும் மார்னஸ் லாபுஷாக்னே ஆகியோரின் இரண்டு பெரிய விக்கெட்டுகளை முதல் அமர்வின் தொடக்கத்திலேயே தொடர்ச்சியாக இரண்டு பந்துகளில் கைப்பற்றினார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அவரது இந்த விக்கெட்கள், தனது கிரிக்கெட் அணியை வலுவான நிலையில் கொண்டு செல்ல அவருக்கு உதவியது


மார்னஸ் லாபுசாக்னேவை கோல்டன் டக்கில் ஆட்டமிழக்கச் செய்த பிராட், ஆஸ்திரேலிய அணிக்கு பெரும் அடி கொடுத்தார். அதன் பின், விக்கெட் எடுத்தது தொடர்பான ஒரு சுவாரசியமான கதையையும் அவர் தெரிவித்தார். முதல் பந்தை ஆடுவதற்கு முன்பு, லாபுஷாக்னே இரண்டு போலீஸ்காரர்களிடம் அங்கிருந்து நகர்ந்து செல்லுமாறு சொல்வதைக் கண்டார்.


மேலும் படிக்க | தோனி என்னை அணியில் இருந்து தூக்கும் முன் என்ன சொன்னார் தெரியுமா? - ரகசியம் பகிரும் ரெய்னா!


பிராட்டின் கூற்றுப்படி, இதுவே மார்னஸின் கவனத்தை அசைத்து அவரது விக்கெட்டை எடுக்க உதவியது. "லாபுஷாக்னே அவர்களை பார்த்து சமிக்ஞை செய்த சில கணங்களில் அவரது கவனம் கொஞ்சமாவது சிதறியிருக்கும், அதுவே எனக்கு மிகப்பெரிய உதவியாக இருந்தது. அது எனக்கு விக்கெட் எடுக்க உதவியது" என்று பிராட் டெய்லி மெயிலில் எழுதினார்.


பிராட், அடுத்த பந்திலும் மற்றொரு விக்கெட் எடுத்திருந்தால் அது ஹாட்ரிக் ஆக இருந்திருக்கும், ஆனால் அது நடைபெறவில்லை. ஆஷஸ் தொடரின் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மண்ணில் இரண்டாம் நாள் ஆட்டத்தில் கலக்கியது.


உஸ்மான் கவாஜா (126 நாட் அவுட்) மற்றும் அலெக்ஸ் கேரி (52 ரன்), டிராவிஸ் ஹெட் (50) ஆகியோரின் அரை சதங்கள், வீழ்ச்சியடைந்த ஆஸ்திரேலிய இன்னிங்ஸை மீட்டெடுத்தன.


மேலும் படிக்க | Ashes 2023: இந்தியாவை வீழ்த்திய ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி மீண்டும் ஆஷஸ் தொடரை கைப்பற்றுமா?


ஆஷஸ் தொடரை வெல்வது இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய வீரர்களுக்கு என்றுமே மிகவும் முக்கியமானது. எட்ஜ்பாஸ்டனில் ஆஷஸ் 2023 தொடரின் முதல் போட்டி நடந்துவருகிறது. இந்த போட்டித்தொடர் 140 ஆண்டுகளுக்கும் மேலான வரலாறு கொண்டது. இரு அணிகளுக்கும் இந்த போட்டியை வெல்வது மிகவும் முக்கியமானதாக நினைக்கின்றன.


இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் ஆஸ்திரேலியா அணி, ஆஷஸ் தொடரின் முதல் போட்டியில் விளையாடி வருகிறது. ஜூலை 26 ஆம் தேதி வரை ஆஸ்திரேலிய அணி 5 டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது.


முதல் டெஸ்ட் தொடங்குவதற்கு சற்று முன்னதாக, ஓவலில் நடந்த முதல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா 209 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது. 13 போட்டிகளில் 11 வெற்றிகளை பெற்று, கிரிக்கெட்டின் அனைத்து வடிவங்களிலும் சாம்பியனாக இருக்கும் ஆஸ்திரேலியா, ஆஷஸ் தொடரின் நடப்பு சாம்பியன் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | 2024 நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவாரா அம்பதி ராயுடு? பரபரக்கும் அரசியல் களம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ