ஆரம்ப போட்டியில் அபார சதம்; வியப்பில் ஆழ்தினார் ப்ரத்வி ஷா!
இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் 293-வது வீரராக களமிரங்கியுள்ள அறிமுக வீரர் ப்ரத்வி ஷா தனது முதல் போட்டியில் சதம் அடித்து அசத்தியுள்ளார்!
இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் 293-வது வீரராக களமிரங்கியுள்ள அறிமுக வீரர் ப்ரத்வி ஷா தனது முதல் போட்டியில் சதம் அடித்து அசத்தியுள்ளார்!
ப்ரித்வி ஷா மகாராஷ்டிர மாநிலம் தானேவில் நவம்பர் 9, 1999 ஆம் நாள் பிறந்தவர். கிரிக்கெட் மீது ஆர்வம் கொண்டதினால் எட்டு வயதில் கிரிக்கெட் ஆடுவதற்கு என்றே, அதற்கேற்ற பள்ளிக்கு மாறியவர்.
இந்திய மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் தனது முதல் டெஸ்ட் பிரவேசத்தை செய்திருக்கும் இவர் முதல் போட்டியிலேயே துவக்க வீரராக களமிறங்கியுள்ளார். மேலும் இன்றைய தனது முதல் போட்டியில் 100(99) ரன்கள் குவித்து சாதனை படைத்துள்ளார்.
முதல் போட்டியிலேயே துவக்க வீரராக களமிறங்கும் அளவிற்கு இவர் என்ன செய்தார்?...
பள்ளி பருவத்தில் இருந்தே கிரிக்கெட்டில் சாதனை புரிந்துவரும் ப்ரித்வி ஷா துவக்க ஆட்டக்கராரக களமிறங்கும் தகுதி உடையாவர் தான். பள்ளி பருவத்தில் தான் விளையாடிய டிவிஷன் லீகில் 14 வயதில் சதம் அடித்து, குறைந்த வயதில் சதம் அடித்த சாதனையை செய்தார் என்ற பெருமைய பெற்றுள்ளார். அதே 14 வயதில் பள்ளிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டியில் 546 ரன்கள் அடித்து அசத்தியுள்ளார்.
தனது 17-வது வயதில் தன் முதல் ரஞ்சி போட்டியில் களம்கண்ட இவர் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். அதேபோல் துலீப் தொடரிலும் முதல் போட்டியில் சதம் அடித்து இரண்டு முதல் தர கிரிக்கெட் தொடர்களின் முதல் போட்டியில் சதம் அடித்த சாதனையும் புரிந்துள்ளார். இந்நிலையில் தற்போது தனது முதல் சர்வதேச டெஸ்ட் போட்டியிலும் 100(99) ரன்கள் அடித்து சாதனை படைத்துள்ளார்.
இதையடுத்து மும்பை U16 அணியின் கேப்டன், ICC U19 தொடரில் இந்திய அணியின் கேப்டனாக இருந்து வெற்றி பெற்றுக் கொடுத்துள்ளார்.
இத்தனை சாதனைகளை படைத்த இவர் இந்தாண்டு தனது IPL பிரவேசத்தினை துவங்கினார். IPL 2018 தொடரில் ப்ரித்வி ஷா ஆடிய விதம் கிரிக்கெட் ரசிகர்களை திரும்பி பார்க்க வைத்தது.
இதனையடுத்து இவருக்கு இங்கிலாந்து டெஸ்ட் தொடரின்போது இந்திய கிரிக்கெட் அணியில் இடம் கிடைத்தது. எனினும் களத்தில் இறங்கி ஆடும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்நிலையில் தற்போது, வெஸ்ட் இண்டீஸ் தொடரில் களம் இறங்கி ஆடி வருகிறார்.
இப்போட்டியில் அதிரடியாக விளையாடி வரும் ப்ரித்வி தனது சர்வதேச டெஸ்ட் போட்டியில் சதம் அடித்துள்ளார். இதன்மூலம் 18 வருடம் 329 நாட்கள் என்னும் குறைந்த வயது கொண்ட இவர், ஆரம்ப போட்டியில் சதம் அடித்த இந்தியாவின் முதல் இளம் வீரர் எனும் பெருமையும் படைத்துள்ளார்!