அர்ஜென்டினாவின் நட்சத்திர கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி தற்போது பாரிஸ் செயின்ட்-ஜெர்மைன் கால்பந்து அணியில் (Paris Saint-Germain Football Club) இருக்கிறார். இந்த ஆண்டு ஜூன் இறுதியில் ஒப்பந்தம் முடிவடையும் போது அவர் PSG என்று அறியப்படும் பாரிஸ் செயின்ட்-ஜெர்மைன் அணியை விட்டு வெளியேற வாய்ப்புள்ளது என்று பலரும் கருத்துத் தெரிவிக்கின்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மெஸ்ஸி, கால்பந்து கிளப்பில் இருந்து மாறுவதற்கான முடிவை மேற்கொண்டிருப்பதாக வரும் செய்திகள் வதந்திகளாக இருக்கலாம். இருப்பினும், அவரது வயது மற்றும் அவருக்கு கொடுக்கப்பட வேண்டிய மிகவும் அதிகமான ஊதியம் அவரை மற்றொரு கிளப்புக்கு செல்வதற்கான சாத்தியங்களை குறைக்கின்றன.


ஆனால், எதுவும் எப்படி வேண்டுமானாலும் மாறலாம். மாற்றம் ஒன்றே மாறாதது என்பதால், லியோனல் மெஸ்ஸி PSG கால்பந்து அணியில் இருந்து வெளியேற முடிவு செய்தால், அவர் எந்த கால்பந்து கிளப்புகளில் சேரலாம்? அதற்கான சாத்தியக்கூறுகள் என்ன?


36 ஆண்டுகளுக்குப் பிறகு முதன்முறையாக அர்ஜென்டினாவுக்கு கடந்த ஆண்டு உலகக் கோப்பையை வென்ற தேசிய அணியின் கேப்டன் லியோனல் மெஸ்ஸி என்பது குறிப்பிடத்தக்கது. பாரிஸ் செயின்ட்-ஜெர்மைன் கால்பந்து அணியில் தற்போது இருக்கும் மெஸ்ஸி ஏன் வெளியேறலாம் என்று அனுமானிக்கப்படுகிறது தெரியுமா?


மேலும் படிக்க | ’ரன் அடிக்கிறதே இல்லை.. இவர ஏன் எடுக்கிறாங்க?’ கொல்கத்தா வீரரை விளாசிய கவாஸ்கர்


PSG ரசிகர்களால் கேலி செய்யப்பட்ட மெஸ்ஸி
கடந்த ஞாயிற்றுக்கிழமை பிஎஸ்ஜி கால்பந்து அணி தோற்றபோது லியோனல் மெஸ்ஸியை, அணியின் ரசிகர்கள் கேலி செய்தார்கள். ரசிகர்களின் கேலி அளவைக் கடந்து போனது என்பது, கால்பந்து கிளப்புக்கும் மெஸ்ஸிக்கும் இடையிலான மோசமான உறவுகளை பிரதிபலித்தது. இந்த ஆண்டு இறுதியில் ஒப்பந்தம் முடிவடையும் போது மெஸ்ஸி கிளப்பை விட்டு வெளியேறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று கூறப்படுவதற்கான அண்மைக் காரணம் இதுதான்.  
 
பார்சிலோனாவுக்கு திரும்புவாரா லியோனல் மெஸ்ஸி?
பார்சிலோனா அணிக்காக மெஸ்ஸி 672 கோல்களை அடித்துள்ளார் என்பது மட்டுமல்ல, மெஸ்ஸியின் கால்பந்து வாழ்க்கையே பார்சிலோனா அணியில் தான் தொடங்கியது. மெஸ்ஸியுடன் விளையாடிய தற்போதைய பார்கா பயிற்சியாளர் சேவி, மீண்டும் மெஸ்ஸியை வரவேற்க தயாராகிவிட்டார்.


ஆனால் மெஸ்ஸி திரும்பி வருவாரா இல்லையா என்பது அவரது விருப்பத்தைப் பொறுத்தது என்றும் ஜாவி குறிப்பிட்டார். மெஸ்ஸி 2021 இல் பார்காவை விட்டு வெளியேறினார், ஏனெனில் ஏற்கனவே நிதி அழுத்தத்த்தில் இருக்கும் பார்சிலோனா கால்பந்து கிளப், லியோனல் மெஸ்ஸி வாங்கும் சம்பளத்தைக் கொடுக்க முடியாது என்று தெளிவுபடுத்திவிட்டது.  


மேலும் படிக்க | மும்பை அணி ரசிகர்களுக்கு மட்டுமே அனுமதி - நீடா அம்பானியின் முடிவால் அதிர்ச்சி 


ரொனால்டோவைப் போல சவுதி லீக்கில் சேருவாரா மெஸ்ஸி?
லியோனல் மெஸ்ஸி தனது நீண்டகால போட்டியாளரான கிறிஸ்டியானோ ரொனால்டோவைப் போலவே சவுதி அரேபியாவுக்குச் செல்ல அதிக வாய்ப்புகள் உள்ளதாக பலரும் நம்புகின்றானர். உள்ளது. கிறிஸ்டியானா ரொனால்டோ, இந்த ஆண்டின் தொடக்கத்தில் இதுவரை இல்லாத மிகப் பெரிய ஊதியத்தில் அல் நாசர் கால்பந்து கிளப்புடன் இணைந்தார்.


அதன் அடிப்படையில் சவுதி ப்ரோ லீக்கின் மற்றொரு முன்னணி கிளப்பான அல் ஹிலால் அணி, மெஸ்ஸிக்கு மிக அதிக ஊதியம் வழங்கத் தயாராக இருப்பதாக கூறப்படுகிறது. அப்படி நடந்தால், மெஸ்சி vs ரொனால்டோ என்ற போட்டி மீண்டும் தொடங்கிவிடும். அப்படி மட்டும் நடந்தால், கால்பந்து ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்
 
மான்செஸ்டர் சிட்டியில் இணைவாரா மெஸ்ஸி?
PSG உடன் ஒரு சீசனுக்கு 40 மில்லியன் யூரோக்கள் (USD 43.6 மில்லியன்) பெறும் மெஸ்ஸியை சேர்த்துக் கொள்ள போட்டியிடும் ஐரோப்பிய கிளப்புகளில் மான்செஸ்டர் சிட்டி மிகப்பெரிய போட்டியாளராகத் தெரிகிறது.


ஆனால் எர்லிங் ஹாலண்ட் மற்றும் பிளேமேக்கர் கெவின் டி ப்ரூய்ன் ஏற்கனவே இருப்பதால், மேலாளர் பெப் கார்டியோலா அவரை அணியில் சேர்க்க விரும்புவாரா? என்பது ஒரு பெரிய கேள்வி.  


மேலும் படிக்க | கேன் வில்லியம்சன் காயம் சிறியது! ஆனால் 2023இல் இந்தியாவில் விளையாட முடியாது
 
Major League Soccer  


மேஜர் லீக் சாசர் அணியில் லியோனல் மெஸ்ஸி சேரலாம் என்ற பேச்சும் அடிபடுகிறது. இது நடக்குமா என்ற கேள்விக்கு பின்னால் பல சந்தேகங்கள் எழுகின்றன. தற்போது மெஸ்ஸிக்கு 36 வயதாகிறது என்பதுடன், தனது வீட்டை அமெரிக்காவிற்கு மாற்றுவதை அவர் விரும்புவாரா என்ற கேள்வி எழுகிறது.டேவிட் பெக்காம் மற்றும் ஸ்லாடன் இப்ராஹிமோவிச் ஆகியோர் கடந்த காலத்தில் இதே பாதையில் சென்றுள்ளனர்.


இண்டர் மியாமி கால்பந்து கிளப்


இண்டர் மியாமி கால்பந்து கிளப்பில் மெஸ்ஸி இணையலாம் கிளப் என்று சில தகவல்கள் கூறுகின்றன. இண்டர் மியாமி கிளப்பால் மெஸ்ஸியின் அதிக அளவிலான ஊதியம் கொடுக்குமா என்ற கேள்வி எழுகிறது.


ஸ்ட்ரைக்கரை கவர்ந்திழுக்க சர்வதேச அளவில் கால்பந்து அணிகள் பல்வேறு திட்டங்களை தீட்டி வருகின்றன என்பது லியோனல் மெஸ்ஸியின் திறமைக்கு சான்றாகும். 


கால்பந்து மைதானத்தில் இறங்கிவிட்டால் அரக்கன் மெஸ்ஸி என்று சொல்லும் அளவுக்கு விளையாட்டு வெறி கொண்ட மெஸ்ஸி, கால்பந்து வரலாற்றில் அதிக கோல் அடித்தவர்களின் பட்டியலில் ரொனால்டோவுக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் உள்ளார். இதுவரை ஏழு பலோன் டி’ஆர் விருதுகளை வென்ற சாதனை வீரர் மெஸ்ஸி.


மேலும் படிக்க | ஐபிஎல் அணிகளில் யாருக்கு அதிக ரசிகர்கள்...? இதோ முழு விவரம்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ