Mithunam Purattasi Matha Rasi Palan 2024: புரட்டாசி மாசத்துல குருபகவான் வக்கிரம் அடைகிறார். இதன் காரணமாகா சனி பகவான் ஆட்சி பலம் பெற்றிருக்கிறார். புரட்டாசி மாசத்தை பொறுத்தவரையிலே மூன்று கிரகங்கள் ஆட்சி பலம் பெறுகின்றன. ஒன்று புதன், மற்றொன்று சுக்கிரன் மற்றும் சனி பகவான் இந்த மூன்று கிரகங்களும் ஆட்சி பலம் பெறுகின்றன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

எப்பொழுதும் போல மகாலட்சுமியின் வீடாக விளங்கக்கூடிய ரிஷபத்தில் குருபகவான் வக்கிர நிலையிலே அமைந்திருக்கிறார் குரு. மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் சனியும் குருவும் சேர்ந்தால் மிகப்பெரியது ஒரு ராஜ யோகம் (பணக்கார யோகம்) இந்த புரட்டாசி மாசத்தில் ஏற்படுகிறது. எனவே ஒவ்வொரு ராசிக்கும் புரட்டாசி மாத எப்படி இருக்கிறது என்பதை பார்த்து விடலாம்.


மிதுன ராசிக்கான புரட்டாசி மாத பலன்கள் மற்றும் எச்சரிக்கை


இந்த புரட்டாசி மாசத்தை பொறுத்தவரையில் மிதுன ராசிகாரர்களுக்கு நல்ல மாதமாக அமைகிறது. பொதுவாவே லாபஸ்தான அதிபதியாக விளங்கக்கூடிய செவ்வாய் பகவான் அற்புதமான முறையில மிதுனத்தில் அமைந்திருக்கிறார். திருவாதிரையில் சஞ்சாரம் செய்யக்கூடிய செவ்வாய்க்கு பலம் அதிகம். எனவே உத்தியோகம் சார்ந்த விஷயங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். 


மிதுன ராசிக்கான சிறப்பு வழிபாடு


சிறு சிறு விபத்துக்கள் ஏற்படலாம். சற்று கவனமாக இருக்க வேண்டும். மிதுன ராசியில் வக்கிர சனியும் சேர்ந்திருப்பதால் சண்டை அடிக்கடி நடக்கலாம். இந்த பிரச்சனைகளில் இருந்து தப்பிக்க பிறப்பு ஜாதகத்தை ஆராய்ந்து எந்த தெய்வத்தை வழிபாடு செய்தால் பிரச்சனை தீருமோ..  அந்த தெய்வத்தை வழிபாடு செய்வது சிறப்பு. 


மிதுன ராசிக்கான குடும்ப பிரச்சனை


அதேபோல குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சனை, சச்சரவுகள், பிள்ளைகள் பிடிவாதம் என மனவருத்தத்தில் நீங்கள் இருந்தால் நிச்சயமா அந்த மாதிரி பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்க வாய்ப்புகள் உண்டு. 


மிதுன ராசிக்கான பண வரவு 


இந்த நேரத்தில் ரொம்ப ஜாக்கிரதையா இருக்க வேண்டும். தேவையில்லாத பணங்காசுகளையோ உதவிகளையோ செய்துட்டு மாட்டிக்க கூடாது. சம்பந்தமில்லாத உதவிகள் செய்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும். உங்களிடம் பணம் இருப்பதை தெரிந்துக்கொண்டு, எனக்கு கொஞ்சம் பணம் குடுங்கள் எனக் கேட்டால், அவர்களுக்கு பணம் கொடுப்பீர்களேயானால் திரும்புவது கடினம். 


மேலும் படிக்க - சுக்கிரன் நட்சத்திர பெயர்ச்சி.. அனைத்திலும் வெற்றி, ராஜாதி ராஜ வாழ்க்கை இந்த ராசிகளுக்கு


மிதுன ராசிக்கான பிசினஸ்


பைனான்ஸ் பிசினஸ் செய்யக்கூடியவர்கள், ஃபண்ட் டிரான்ஸ்பர் செய்யக்கூடியவர்கள், கமிஷன் பிசினஸ் செய்யக்கூடியவர்கள் குறிப்பா ஷேர் மார்க்கெட், ஸ்டாக் மார்க்கெட் போன்றவற்றில் முதலீடு செய்யக்கூடியவர்கள் அனைவருமே மிக கவனமாக நடந்து கொள்ள வேண்டும். 


மிதுன ராசிக்கான வேலை வாய்ப்பு


வேலை செய்யும் இடத்தில் ரொம்ப கவனமாக நடந்து கொள்ள வேண்டும். வேலை வாய்ப்புகள் குறித்து ரொம்ப ஜாக்கிரதையா நடந்துக்கணும். வேலை மாறுவதற்கான நேரம் இதுவல்ல. கொஞ்சம் எச்சரிக்கையாக நடந்து கொள்ள வேண்டும். 


மிதுன ராசிக்கான கடன் பிரச்சனை


மறைமுகமான பிரச்சனை, கடன் சுமை பிரச்சனைகள் இருக்குமேயானால் அவையெல்லாம் நன்மைகளாக மாறுவதற்கு வாய்ப்புகள் உண்டு. கடன் சுமைகள் குறையும், குடும்ப பிரச்சனைகள் தீரும்.


மிதுன ராசிக்கான திருமண யோகம்


திருமண யோகத்தை பொறுத்தவரையில் முதல் திருமணம், இரண்டாவது திருமணம், தள்ளிப்போன திருமணம், தடைபட்ட திருமணம், காதல் திருமணங்கள் செய்ய நினைப்பவர்களுக்கு திருமண யோகம் கைகூடும். குறிப்பாக பெண்களுக்கு
நல்ல மாப்பிள்ளை கிடைப்பாங்க. அதேபோல ஆண்களுக்கு நிச்சயமா நல்ல பெண்கள் கிடைப்பாங்க


மேலும் படிக்க - குரு வக்ர பெயர்ச்சி.. மகா பொற்காலம், அதிர்ஷ்ட பண மழை இந்த ராசிகளுக்கு


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ