டிராவிட் இருக்கும்போது நான் பயிற்சியாளர் ஆகியிருக்கக்கூடாது - ரவிசாஸ்திரி ஓபன்டாக்
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பொறுப்புக்கு டிராவிட் விட சிறந்தவர் கிடையாது என ரவி சாஸ்திரி புகழாரம் சூட்டியுள்ளார்.
இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்து மீண்டும் வர்ணனையாளராக மாறியிருக்கும் ரவிசாஸ்திரி, தன்னுடைய பயிற்சியாளர் பதவி குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார். இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்கு டிராவிட்விட சிறந்த ஒருவர் இருக்க முடியாது எனக் கூறியுள்ள அவர், தான் அந்த பதவியில் இருந்து விலகியவுடன் அவர் அந்தப் பொறுப்பை ஏற்றுக் கொண்டது மிக்க மகிழ்ச்சி எனத் தெரிவித்தார்.
மேலும் படிக்க | 2008-ல் பாண்டிங்கிற்கு தோனி கொடுத்த அந்த மெசேஜ்!
ஸ்கைஸ்போர்ட்ஸில் வர்ணனையாளராக இருக்கும்போது நாசர் ஹூசைன் உள்ளிட்டோருடன் கலகலப்பாக உரையாடினார். அப்போது, " எனக்கு பயிற்சியாளர் பதவி கிடைத்தது எல்லாம் ஒரு தற்செயல் தான். நான் ஒரு வர்ணனையாளர். இந்திய அணியின் பயிற்சியாளர் பொறுப்புக்கு டிராவிட் விட சிறந்த ஒருவர் இருக்க முடியாது. எனக்குப் பிறகு அவர் பயிற்சியாளர் பொறுப்பை ஏற்றுக் கொண்டது மிகுந்த மகிழ்ச்சி.
டிராவிட்டிடமும் நான் இதனைக் கூறிவிட்டேன். என்னை பயிற்சியாளர் பதவிக்கு அழைத்தார்கள். என்னால் முடிந்ததை செய்துவிட்டேன். இந்திய கிரிக்கெட்டின் அமைப்பை உருவாக்கிய பணியில் ஈடுபட்டவர் ராகுல் டிராவிட். 19 வயதுக்குட்பட்டோருக்கான அணி உள்ளிட்ட இளம் வீரர்களை உருவாக்கும் பணியில் ஈடுபட்டவர் டிராவிட். அந்தப் பணியில் இருந்து பயிற்சியாளர் பொறுப்புக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
அவரது பயிற்சியின் கீழ் இந்திய அணி வெற்றிபெறும்போது இன்னும் மகிழ்ச்சியாக இருக்கும். பயிற்சியாளராக இருக்கும்போது தினமும் நீங்கள் தீர்பளிக்கப்பட்டு கொண்டே இருப்பீர்கள். மக்களின் பார்வையிலிருந்தும் விமர்சனத்தில் இருந்தும் நீங்கள் தப்பிக்கவே முடியாது. நான் பயிற்சியாளராக இருந்த 7 ஆண்டுகளில் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டது. அது எனக்கு பெருமை தான். எனக்கு முன் இந்திய அணி சிறப்பாக இல்லை. ஆனால் எனக்குப் பிறகு இந்திய அணி புதிய உயரத்தை எட்டியது. தரவரிசையை எடுத்து பார்த்தால் அது உங்களுக்கு தெரியும் என பெருமையுடன் ரவிசாஸ்திரி கூறினார்.
மேலும் படிக்க | ஷிகர் தவான் தலைமையில் வெஸ்ட் இண்டீஸ் செல்லும் இந்திய அணி
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR