டெஸ்ட் போட்டியில் சாதனை செய்த அஸ்வின்!!
இலங்கைக்கு எதிரான 2_வது டெஸ்ட் போட்டியில் இந்தியாவின் நட்சத்திர சுழல் பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் தனது 11_வது அரைசதத்தை எடுத்தார். இதன் மூலம் டெஸ்ட் விளையாட்டில் 2000 ரன்கள் கடந்து உள்ளார்.
பந்து வீச்சாளர்களான ரிச்சர்ட் ஹாட்லி, இம்ரான் கான் மற்றும் இயன் போத்தம் ஆகியோரை அடுத்து ஒரு பந்து வீச்சாளர் டெஸ்ட் விளையாட்டில் 2000 ரன்கள் கடந்தது அஸ்வின் மட்டுமே.
மேலும் இலங்கைக்கு எதிரான 2_வது டெஸ்ட் போட்டியில் உபுல் தரங்க அவுட் செய்ததன் மூலம் டெஸ்ட் விளையாட்டில் மொத்தம் 250 விக்கெட்டுகள் வீழ்த்திய வீர்கள் பட்டியலில் இணைந்தார். இந்திய வீரர்கள் கபில்தேவ், ஹர்பஜன் சிங், அனில் கும்ப்ளே ஆகியோர் அடுத்து இந்த சாதனையை அஸ்வின் செய்துள்ளார்.
தனது 51_வது டெஸ்ட் போட்டியில், 2000 ரன்கள் மற்றும் 250 விக்கெட்டுகள் எடுத்துள்ளார் விச்சந்திரன் அஸ்வின்.