இந்தியாவில் மீண்டும் கொரோனா தொற்று வேகமாக அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் தினசரி பாதிப்பு 100க்கும் குறைவாக இருந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக 700-ஐக் கடந்துள்ளது. அரசியல் தலைவர்கள் முதல் சினிமா மற்றும் கிரிக்கெட் பிரபலங்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் அஸ்வினுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | டெஸ்ட் கிரிக்கெட்டில் விராட் கோலியின் டாப் 5 சாதனைகள்!


இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டி ஜூலை 1 ஆம் தேதி தொடங்க இருக்கிறது. இதற்காக இந்திய அணியில் இடம்பிடித்திருக்கும் அனைத்து வீரர்களும் லண்டன் புறப்பட்டுச் சென்றுள்ளனர். தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான 20 ஓவர் தொடரில் பங்கேற்ற பயிற்சியாளர் டிராவிட், ரிஷப் பன்ட் மற்றும் ஸ்ரேயாஸ் அய்யர் ஆகியோர் செவ்வாய்க்கிழமை இங்கிலாந்து கிளம்பினர்.



ஏற்கனவே இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணியினர், பிரவீன் ஆம்ரே மற்றும் ரத்தோர் ஆகியோரின் அறிவுரையின்பேரில் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கும் அஸ்வின் மட்டும் இங்கிலாந்து செல்லவில்லை. அவர் இப்போது தனிமைப்படுத்தப்பட்டு, மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளார். 


மேலும் படிக்க | டெஸ்ட் கிரிக்கெட்டில் விராட் கோலியின் டாப் 5 சாதனைகள்!


இதுகுறித்து பிசிசிஐ நிர்வாகிகள் கூறும்போது, டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக அவர் உடல் நலம் பெற்றுவிடுவார் என்ற நம்பிக்கையில் இருக்கிறோம். கொரோனா தொற்றில் இருந்து மீண்டவுடன் அவர் இங்கிலாந்தில் இருக்கும் இந்திய அணியுடன் இணைந்து கொள்வார். லீசெஸ்டர்ஷைர் அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் மட்டும் அஸ்வின் கலந்து கொள்ளமாட்டார் எனத் தெரிவித்துள்ளார். இதேபோல், விவிஎஸ் லக்ஷ்மண் பயிற்சியாளராக பொறுப்பேற்றிருக்கும் அயர்லாந்து செல்லும் இந்திய அணி, ஜூன் 23 அல்லது 24 ஆம் தேதி அயர்லாந்து கிளம்ப உள்ளனர். 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR