இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஆலன் பார்டர் - கவாஸ்கர் கோப்பைக்கான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி நாக்பூரில் தொடங்கியது. டாஸ் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதற்கு பின்னணியில் அந்த அணியின் ஸ்மார்ட் மூவ் ஒன்றும் இருக்கிறது. ஏனென்றால் நாக்பூர் மைதானம் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக அமைக்கப்பட்டுள்ளது. இதனால், 4வது இன்னிங்ஸில் விளையாடும் அணி பேட்டிங் செய்வது சுலபமாக இருக்கிறது. இதனை மனதில் வைத்தே ஆஸ்திரேலிய அணி டாஸ் வெற்றி பெற்றதும் பேட்டிங்கை தேர்வு செய்துவிட்டது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆஸ்திரேலியா பேட்டிங்


ஆஸ்திரேலிய அணி கேப்டன் பாட் கம்மின்ஸ் டாஸ் வெற்றி பெற்று பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி டேவிட் வார்னர் மற்றும் உஸ்மான் கவாஜா களம் புகுந்தனர். வேகபந்து விளையாடுவதில் கில்லாடியான இருவரும், இந்திய அணியின் வேகப்பந்துவீச்சின் துல்லிய தாக்குதலில் ஆரம்பத்திலேயே விக்கெட்டை பறிகொடுத்தனர். வார்னரை முகமது ஷமி விக்கெட்டை எடுக்க, சிராஜ் கவாஜாவை தட்டி தூக்கினார். இதன் பின்னர் ஆஸ்திரேலிய அணியின் விக்கெட்டுகள் அடுத்தடுத்து விழுந்து கொண்டே இருந்தது. 


மேலும் படிக்க | விபத்திற்கு பிறகு ரிஷப் பந்த் பகிர்ந்த முதல் புகைப்படம்! இணையத்தில் வைரல்!


ஜடேஜா - அஸ்வின் கூட்டணி



மிடில் ஆர்டரில் ஸ்மித் மற்றும் லபுசேன் கூட்டணி போட்டு மெதுவாக அஸ்திரேலியாவின் ஸ்கோரை உயர்த்தினர். 84 ரன்களை அந்த அணி எட்டியபோது, லபுசேன் ஜடேஜா பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தார். நன்றாக விளையாடிக் கொண்டிருந்த அவர், தேவையில்லாமல் இறங்கி வந்து அடிக்க முற்பட்டு ஸ்டம்பிட் என்ற முறையில் விக்கெட்டை பறிகொடுத்தார். அதன்பின்னர் சீரான இடைவெளியில் சில விக்கெட்டுகளை அஸ்வின் மற்றும் ஜடேஜா கூட்டணி வீழ்த்திக் கொண்டே இருந்தது.


ஆஸ்திரேலியா சுருண்டது



5 மாதங்களுக்குப் பிறகு இந்திய அணிக்கு திரும்பிய ஜடேஜா, ஆஸ்திரேலிய அணியின் முக்கியமான 5 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டம் காண வைத்தார். குறிப்பாக, கடைசி 6 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்தது. இதன் மூலம் 177 ரன்களுடன் ஆஸ்திரேலியாவின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் முடிவுக்கு வந்தது. ஜடேஜாவை தவிர்த்து அஸ்வின் 3 விக்கெட்டுகளையும், சிராஜ், ஷமி தலா 1 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். 3 விக்கெட்டுகளை வீழ்த்திய அஸ்வின், டெஸ்ட் போட்டியில் புதிய மைல் கல்லை எட்டியுள்ளார். அவர் டெஸ்ட் போட்டியில் 450 விக்கெட்டுகளை வீழ்த்தி, அனில் கும்பிளேவுக்குப் பிறகு இந்த சாதனைக்கு சொந்தக்காரரான 2வது இந்தியர் என்ற சாதனையை படைத்துள்ளார்.


ரோகித் அரைசதம்



இதன்பின்னர் முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி சிறப்பாக விளையாடியது. தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா அரைசதம் விளாசினார். அவருக்கு பக்கபலமாக களத்தில் நின்ற கே.எல்.ராகுல் 20 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 77 ரன்களுக்கு 1 விக்கெட்டை இழந்துள்ளது. ரோகித் சர்மா 56 ரன்களுடனும், அஸ்வின் ரன் ஏதும் எடுக்காமலும் களத்தில் உள்ளனர். 


மேலும் படிக்க | IND VS AUS: கோலி 64 ரன்கள் அடித்தால்... சச்சினின் இந்த சாதனையும் அவுட்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ