இங்கிலாந்துக்கு எதிரான 5-வது டெஸ்ட் போட்டியில் இந்தியா 292 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் செப்டம்பர் 7-ஆம் நாள் துவங்கி நடைப்பெற்று வருகிறது. ஆட்டத்தின் இரண்டாம் நாளான நேற்றைய தினம் முடிவில் இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் எடுத்து இருந்தது, முன்னதாக இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 332 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த நிலையில் இந்திய அணி 158 ரன்கள் பின்தங்கி இருந்தது.


இந்நிலையில் இன்று ஆட்டத்தின் மூன்றாம் நாள் துவங்கியது. களத்தில் இருந்த ஜடேஜா மற்றும் விஹாரி நிதானமான ஆட்டத்தினை வெளிப்படுத்தி வந்தனர். இவர்களின் நிதானமான ஆட்டத்தால் இந்திய அணியின் ஸ்கோர் கனிசமாக உயர்ந்தது.


அறிமுக வீரரான விஹாரி 56(124) எட்டிய நிலையில் மியோன் பந்தில் வெளியேறினார். இவரை தொடர்ந்து வந்த இஷாந்த் ஷர்மா 4(25) மற்றும் மொஹமது சமி 1(5) ரன்களில் வெளியேறினர். மறுமுனையில் ஜடேஜா நிதானமாக விளையாடி அணிக்கு பலம் சேர்த்தார்.



எனினும் கடைசி வீரராக களமிறங்கிய பூம்ரா 0(14) என ரன் ஏதும் எடுக்காத நிலையில் ரன் அவுட் ஆனார். கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்த ஜடேஜா 86(156) ரன் குவித்ததால் இந்தியா 292 ரன்கள் குவித்தது. இந்த ஸ்கோர் மூலம் இந்தியா, இங்கிலாந்து அணியை விட 40 ரன்கள் பின்தங்கிய நிலையில் உள்ளது. இங்கிலாந்து அணி தரப்பில் ஆண்டர்சன், பென் ஸ்டோக்ஸ், மோயின் அலி தல 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.


இதனையடுத்து இங்கிலாந்த தனது இரண்டாவது இன்னிங்சை துவங்கவுள்ளது.