ரூட்டை மாற்றிய ஆர்சிபி! பிளானை ஓபனாக சொன்ன கேப்டன் டூபிளெசிஸ்
RCB Captain Faf du Plessis explains: லக்னோ அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் ஆர்சிபி அணி டாஸ் வெற்றி பெற்று பேட்டிங்கை எடுத்தது ஏன்? என அந்த அணியின் கேப்டன் ஃபாஃப் டு பிளெசிஸ் ஓபனாக தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் 2024 தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி), லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (எல்எஸ்ஜி) அணிகளுக்கு இடையிலான 15வது லீக் போட்டி பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வெற்றி பெற்ற கேப்டன் ஃபாஃப் டு பிளெசிஸ் பவுலிங் வீசுவதாக அறிவித்தார். முதலில் பேட்டிங் ஆடுவதற்கான முக்கிய காரணத்தை அவரே தெரிவித்தார். இது குறித்து அவர் பேசும்போது, "கடந்த போட்டியில் முதலில் ஆடி தோல்வியை தழுவினோம், நாங்கள் எதிர்பார்த்தப்படி பிட்ச் இல்லை என்பதை பேட்டிங் ஆடிய பிறகே தெரிந்தது. இப்போதும் பிட்சில் சில இடங்கள் டிரையாக இருக்கிறது. அதனால், எங்களுடைய பலம் பேட்டிங் என்பதால், சேஸிங் செய்யலாம் என தீர்மானித்திருக்கிறோம்" என டு பிளெசிஸ் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய டு பிளெசிஸ், கடந்த போட்டியில் தோல்வியடைந்த பிறகு நாங்கள் அது குறித்து கலந்தாலோசித்தோம், எங்களிடம் இருக்கும் தவறுகள் குறித்து பேசினோம், அதில் இருந்து பாடம் கற்றுக் கொண்டதாலும், மைதானத்தின் தன்மையை புரிந்து கொண்டதாலும் இந்தப் போட்டியில் இரண்டாவது பேட்டிங்கை தேர்வு செய்கிறோம் என்று கூறினார். மேலும், கடந்த போட்டியில் ஆடிய அல்சாரி ஜோசப்புக்கு பதிலாக டாப்லி பிளேயிங் லெவனில் இடம்பிடித்துள்ளார், அது மட்டுமே ஒரு மாற்றம் என்றும் கூறினார் டு பிளெசிஸ்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு அணி ஐபிஎல் 2024 தொடரின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் களமிறங்கியது. அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய அந்த அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் சிஎஸ்கேவிடம் தோல்வியை தழுவியது. அடுத்த போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக சேஸிங் ஆடும்போது வெற்றியை பெற்று, இந்த ஐபிஎல் தொடரில் புள்ளிக் கணக்கை தொடங்கியது. ஆனால், கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் மீண்டும் முதல் பேட்டிங் ஆடி தோல்வியடைந்தது. அதாவது, சேஸிங் ஆடும்போது வெற்றியும், பந்துவீசும்போது தோல்வியும் அடைந்திருக்கிறது ஆர்சிபி.
அந்தளவுக்கு ஆர்சிபியின் பந்துவீச்சு இந்த ஐபிஎல் தொடரில் நம்பிக்கைகுரியதாக இல்லை. இதனால், லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் சேஸிங் செய்வதே சிறந்தது என்ற முடிவுக்கு வந்தது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு. விராட் கோலி, மேக்ஸ்வெல், டு பிளெசிஸ், கேம்ரூன் கிரீன், தினேஷ் கார்த்திக் என வலுவான பேட்டிங் பட்டாளம் இருக்கிறது என்பதால் சேஸிங்கை நம்பிகையோடு தேர்வு செய்தார் கேப்டன் டு பிளெசிஸ்.
அதன்படி பேட்டிங் இறங்கிய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 181 ரன்கள் குவித்தது. அந்த அணியில் டி காக் 81 ரன்களும், ராகுல் 20 ரன்களும் எடுத்தனர். மிடில் ஆர்டரில் ஸ்டொயினஸ் 24 ரன்களும், நிக்கோலஸ் பூரன் 40 ரன்களும் எடுத்தனர். பந்துவீச்சைப் பொறுத்தவரை சூப்பராக பந்துவீசி மேக்ஸ்வெல் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். சிராஜ், தயாள், டாப்லி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
மேலும் படிக்க | ஐபிஎல் அட்டவணையில் மாற்றம்.. இரண்டு போட்டிகளின் தேதியில் மாற்றம்.. பிசிசிஐ அறிவிப்பு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ