ஐபிஎல் 2023 அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் நிலையில், அதற்கான முன்னேற்பாடுகள் படு ஜோராக தொடங்கியிருக்கிறது. அண்மையில் பிளயேர் ரீட்டென்ஷன் முடிந்துவிட்டது. ஒவ்வொரு அணிகளும் தங்களுக்கு வேண்டிய வீரர்களை தக்க வைத்துக் கொண்டு வேண்டாத பிளேயர்களை விடுவித்துவிட்டன. விடுவிக்கப்பட்ட வீரர்கள் இன்னும் சில மாதங்களில் கொச்சியில் நடைபெறும் ஐபிஎல் மினி ஏலத்தில் பங்கேற்பார்கள். இதில் கிரிக்கெட் ரசிகர்களுக்கு பல சுவாரஸ்யங்கள் காத்திருக்கிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு உள்ளிட்ட அணிகளின் சில முடிவுகள் ரசிகர்களுக்கு ஷாக்காக இருந்தாலும், ஏலத்தில் எந்த வீரரை டார்கெட் செய்வார்கள் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருக்கின்றனர். களத்தில் ஆக்ரோஷமாக ஐபிஎல் அணிகள் மோதிக் கொள்வது போலவே சோஷியல் மீடியாவில் படு சுறுசுறுப்பாக இருப்பார்கள். அந்த வகையில் உலகளவில் அதிக சோஷியல் மீடியா ரசிகர்கள் கொண்ட ஐபிஎல் அணிகளாக எப்போதும் மும்பை மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் இருந்திருக்கின்றன. 


மேலும் படிக்க | உதவிக்கு அழைத்தாரா பாண்டியா... நியூசிலாந்து பறந்த குஜராத் பயிற்சியாளர் - ஏன் தெரியுமா?


எப்போது ஆன்லைன் வாக்கெடுப்பு நடத்தினாலும் இந்த இரு அணிகளில் ஏதேனும் ஒரு அணியே முதலிடத்தில் இருக்கும். ஆனால், இந்த அணிகளுக்கே சர்பிரைஸ் கொடுக்கும் விதமாக சோஷியல் மீடியாவில் முதல் இடத்தை பிடித்திருக்கிறது ஆர்சிபி அணி. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இன்ஸ்டாகிராமில் மிகவும் பிரபலம் வாய்ந்த ஐபிஎல் அணி எது? என்ற லிஸ்டை எடுத்து பார்க்கும்போது ஆர்சிபி அணி முதல் இடத்தை பிடித்து அசத்தியிருக்கிறது. 



இது ஒன்னும் அவ்வளவு பெரிய விஷயம் இல்லையே என நீங்கள் நினைக்கலாம். ஆனால் ஆர்சிபி ரசிகர்களுக்கு அப்படியில்லை. ஐபிஎல் கோப்பையை ஒருமுறைகூட வெல்லவில்லை என்றாலும், சென்னை, மும்பை அணிகளை வீழ்த்தும் எந்தவொரு விஷயத்தையும் அவர்கள் கொண்டாட தவறியதே இல்லை. அந்தவகையில், சோஷியல் மீடியா டிரெண்டிங்கிலாவது சிஎஸ்கே, மும்பைக்கு முன்பாக ஒரு மாதம் இருந்திருக்கிறோம் என்ற ஒரு சந்தோஷம் அவர்களுக்கு இருக்கிறது. இப்படியே ஆண்டுதோறும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு சப்போர்ட் செய்து, இந்த முறையாவது கோப்பையை வெல்லும் என ஏங்கும் ஆர்சிபி ரசிகர்களுக்கு இதுவும் ஒரு கொண்டாட்டம் தான்.


மேலும் படிக்க | ’பவர்பிளே கிங்’ புவனேஷ்வர் குமாருக்காக காத்திருக்கும் மற்றொரு ரெக்கார்டு


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ