ரியோ ஒலிம்பிக் போட்டியில் நேற்று அரங்கேறிய பெண்களுக்கான பேட்மிண்டன் ஒற்றையர் அரைஇறுதியில் 10-ம் நிலை வீராங்கனை இந்தியாவின் பி.வி.சிந்து, தரவரிசையில் 6-வது இடம் வகிக்கும் 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நோஜோமி ஒகுஹராவை (ஜப்பான்) வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். இதனையடுத்து டுவிட்டரில் அவரை பாராட்டி ரசிகர்கள் செய்திகளை பதிவிட்டு வந்தனர்.  


இதற்கிடையே ரசிகர் ஒருவர் இந்தியாவின் மற்றொரு பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவாலை கலாய்த்து டுவிட்டரில் கருத்து பதிவிட்டார். சாய்னாவை கலாய்த்து அன்சூல் சாகர் என்பவர் டுவிட்டரில் “டியர் சாய்னா... உங்களுடைய பேக்கை மூட்டை கட்டுங்கள்... சிறப்பான ஒருவரை எப்படி வீழ்த்துவது என்பதை தெரிந்த ஒருவரை நாங்கள் கண்டுபிடித்துவிட்டோம்,”என்று குறிப்பிட்டார்.


இதற்கு மனதில் ஆழ்ந்து பதியும்படியான ஒருபதிலை கொடுத்த சாய்னா, “கண்டிப்பாக நன்றி... சிந்து உண்மையாகவே சிறப்பாக விளையாடினார்... இந்தியா சிறப்பாக செயல்படுகிறது,” என்றார். 


இதனையடுத்து தவறை உணர்ந்துக் கொண்ட அன்சூல் சாகர், “உங்களை காயப்படுத்தியதற்கு மன்னித்துவிடுங்கள்... நான் உண்மையாகவே இதனை குறிப்பிடவில்லை. நான் இப்போதும் உங்களுடைய விளையாட்டை விரும்புகின்றேன்... நான் உங்களுடைய மிகப்பெரிய ரசிகன், “என்றார். 


இதற்கு பதில்கூறிய சாய்னா, ”எந்தஒரு பிரச்சனையும் இல்லை நண்பா, உங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்,” என்று குறிப்பிட்டார். இதனையடுத்து அன்சுல் சாகரை விமர்சித்து விமர்சனங்கள் எழுந்தது, ஆனால் அவர் என்னுடைய மன்னிப்பை சாய்னா ஏற்றுக் கொண்டார், நான் யாருக்கும் விளக்கம் அளிக்கவேண்டிய அவசியம் இல்லை என்று டுவிட்டரில் தெரிவித்துவிட்டார்.


அவர்களது உரையாடல்:-