சச்சின் டெண்டுல்கருக்கு வழங்கப்பட்ட ‛பாரத ரத்னா' விருதை திரும்பப் பெறக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த 2014ம் ஆண்டு இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருதினை வழங்கி மத்திய அரசு கவுரவித்தது. ஆனால் வி.கே. நாஸ்வா என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார். அவர் தனது மனுவில் தெரிவித்திருப்பதாவது: டெண்டுல்கர் வர்த்தக விளம்பரங்களில் நடிப்பதாலும், அவரை பாரத ரத்னாவாக சித்தரித்து புத்தகங்கள் வெளிவருவதாலும் ‛பாரத ரத்னா' விருதுக்கு களங்கம் ஏற்படுகிறது. எனவே டெண்டுல்கருக்கு வழங்கப்பட்ட ‛பாரத ரத்னா' விருதை திரும்பப் பெற வேண்டும். இவ்வாறு அவர் தனது மனுவில் தெரிவித்திருந்தார்.


இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, சந்திர சூட் ஆகியோரின் அமர்வு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.


அவர்கள் தங்கள் உத்தரவில் தெரிவித்ததாவது: டெண்டுல்கரை பாரத ரத்னா விருதாக சித்திரித்து மூன்றாவது நபர் புத்தகம் எழுதுவதற்கு, டெண்டுல்கர் பொறுப்பாக முடியாது. மேலும் பாரத ரத்னா விருது பெறுபவர் எத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்பதை தெரிவிப்பதற்கான அதிகாரம் கோர்ட்டுக்கு இல்லை. எனவே, இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.