நாடு முழுவதும் 74வது குடியரசு தின கொண்டாட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த நாளில், 26 ஜனவரி 1950 அன்று, இந்திய அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. இதனை கொண்டாடும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் இந்நாளில் குடியரசுத் தலைவரால் டெல்லியில் கொடியேற்றப்படும். மேலும், சிறந்து விளங்கியவர்களுக்கு விருதுகளும் வழங்கி கவுரவிக்கப்படுவார்கள். அந்தவகையில் விளையாட்டு துறையில் சிறந்து விளங்கி ராணுவத்தால் கவுரவிக்கப்பட்டவர்களின் பட்டியலை இங்கே பார்க்கலாம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கபில்தேவ்


இந்திய கிரிக்கெட் அணியை தனது தலைமையின் கீழ் முதல் உலகக் கோப்பையை வெல்வதற்கு வழிவகுத்த புகழ்பெற்ற ஆல்-ரவுண்டர் கபில் தேவுக்கு ராணுவத்தில் கவுரவ பதவி வழங்கப்பட்டுள்ளது. கபில் தேவுக்கு 2008 ஆம் ஆண்டு லெப்டினன்ட் பதவி வழங்கப்பட்டது. இது மட்டுமின்றி, டெரிடோரியல் ஆர்மியின் பிராண்ட் அம்பாசிடராகவும் நியமிக்கப்பட்டார்.


சச்சின் டெண்டுல்கர் 


இந்திய அணிக்காக கிரிக்கெட் களத்தில் பல்வேறு சாதனை படைத்தவர் சச்சின் டெண்டுல்கர். 2011 ஆம் ஆண்டு இந்திய விமானப்படையில் சச்சினுக்கு குரூப் கேப்டன் பதவி வழங்கப்பட்டது. சச்சின் விமானப்படை சீருடையில் மிகவும் அழகாக இருந்தார்.


மேலும் படிக்க | Republic Day 2023: இந்திய தேசிய கொடியை வடிவமைத்த சிப்பாய்..! யார் தெரியுமா அவர்?


தோனி 


இந்திய அணியின் வெற்றிகரமான கேப்டன்களில் ஒருவரான மகேந்திர சிங் தோனிக்கு ராணுவத்தில் சேர வேண்டும் என்பது சிறுவயது கனவாக இருந்தது. இருப்பினும், அவரது கனவு 2011-ல் நிறைவேறியது. அவருக்கு லெப்டினன்ட் கர்னல் பதவி வழங்கப்பட்டது. தோனி கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு எடுத்த பிறகு ராணுவத்தில் பலமுறை பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.


அபினவ் பிந்த்ரா


இதுதவிர ஒலிம்பிக்கில் துப்பாக்கி சுடும் போட்டியில் இந்தியாவுக்கு தங்கப்பதக்கம் வென்று கொடுத்த அபினவ் பிந்த்ராவும் ராணுவ சீருடையில் காணப்பட்டுள்ளார். அவருக்கு 2011 ஆம் ஆண்டு லெப்டினன்ட் கர்னல் பதவி வழங்கப்பட்டது. அபினவ் பிந்த்ரா 2008 ஒலிம்பிக்கில் இந்தியாவுக்காக தங்கப் பதக்கம் வென்றார்.


மேலும் படிக்க | Republic Day: இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் செயலாக்கம்தான் - குடியரசு தினம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ