பழிதீர்க்க ஆட்டமா? விரைந்து ரன்கள் அடித்து வரும் இங்கிலாந்து அணி!
இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியின் பேட்ஸ்மேன்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் 63 பந்துகளில் 7 பவுண்டரிகள் அடித்து 56 ரன்களை கடந்துள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. ஆரம்பத்தின் முதலே சிறப்பாக பந்து வீசிய இங்கிலாந்து அணி இந்திய பேட்ஸ்மேன்களின் விக்கெட்டுகளை அடுத்தடுத்து எடுத்து அசத்தியது. இங்கிலாந்து பவுலர்களை தாக்குபிடிக்க முடியாமல் 78 ரன்களில் ஆல்-அவுட் ஆனது இந்திய அணி. தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணியின் பேட்ஸ்மேன்கள் நிதானமான ஆட்டத்தை ஆடினர். சிறப்பாக ஆடிய ரோரி பார்ன்ஸ் 61 ரன்களும், ஹசீப் ஹமீது 67 ரன்களுக்கு ஆட்டம் இழந்தனர்.
தொடர்ந்து தனது சிறப்பான ஆட்டத்தை வெளிக்கொண்டு வரும் இங்கிலாந்தின் ஜோ ரூட் இந்த இன்னிங்சிலும் அரைசதம் அடித்து அசத்தியுள்ளார். மற்றொரு ஆட்டக்காரரான மலானும் அரைசதம் கடந்துள்ளார். தற்போது இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் அதிரடியான ஆட்டத்தை ஆடி வருகின்றனர். தற்போது 256 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து உள்ள இங்கிலாந்து அணி 278 ரன்கள் முன்னிலையில் உள்ளது. போட்டியின் இரண்டாவது நாளான இன்று விரைவாக ரன்களை அடித்து வலுவான முன்னிலை வைக்க திட்டமிட்டுள்ளது இங்கிலாந்து அணி.
ALSO READ 19 ஆண்டுகளுக்குப் பிறகு லீட்ஸ் மைதானத்தில் ஆடப்போகும் இந்திய அணி!
19 ஆண்டுகளுக்கு முன் இதே மைதானத்தில் ஆடிய இந்தியா இங்கிலாந்து அணிகள், இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 46 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. தற்போது இதற்கு பழிதீர்க்கும் வகையில் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் வெற்றி பெற இங்கிலாந்து அணி ஆடி வருகிறது. இரண்டாவது இன்னிங்சில் இந்திய பேட்ஸ்மேன்கள் சிறப்பாக ஆடும் பட்சத்தில் இப் போட்டியில் இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்கலாம்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYe