இந்தியா வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 20 ஓவர் போட்டி நாளை தொடங்குகிறது. காயம் காரணமாக இந்திய அணியின் துணைக் கேப்டன் கே.எல்.ராகுல் இந்த தொடரில் விளையாடவில்லை. அவருக்கு பதிலாக புதிய துணைக் கேப்டன் யார்? என ஆலோசனை செய்த பிசிசிஐ, இளம் வீரர் ரிஷப் பன்டை துணைக் கேப்டனாக நியமித்துள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


மேலும் படிக்க | டென்னிஸ் பால் to ஐபிஎல் ஜாக்பாட்; பஞ்சாப் நரைனின் சுவாரஸ்ய பின்னணி


மூன்று விதமான கிரிக்கெட் தொடர்களிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் அவருக்கு, கூடுதல் பொறுப்பை கொடுத்துள்ளது பிசிசிஐ. விராட் கோலி கேப்டன் பதவியில் இருந்து விலகியபோது, நீண்ட கால அடிப்படையில் இளம் வீரர் ஒருவருக்கு கேப்டன் பொறுப்பை கொடுக்க வேண்டும் என முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் உள்ளிட்டோர் வலியுறுத்தினர். ரோகித் சர்மா நீண்ட கால கேப்டன் பொறுப்பில் இருக்க முடியாது என்பதால், இளம் வீரர் ஒருவரை இந்திய அணியின் கேப்டனாக தேர்வு செய்வதே சிறந்தாக இருக்கும் என்றும் அவர் கூறியிருந்தார்.



அவர் கூறியது போலவே, அடுத்த இந்திய கேப்டனை தயார் செய்யும் விதமாக 20 ஓவர் இந்திய அணிக்கான துணைக் கேப்டன் பொறுப்பு ரிஷப் பன்டுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. நாளை கொல்கத்தாவில் நடைபெறும் முதல் 20 ஓவர் போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி களம் காண உள்ளது. ஒருநாள் தொடரை முழுமையாக கைப்பற்றிய இந்திய அணி, 20 ஓவர் தொடரிலும் அதே ஃபார்மை வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. காயம் காரணமாக தொடரில் இருந்து வெளியேறியுள்ள வாஷிங்டன் சுந்தருக்கு பதிலாக குல்தீப் களம் காண்பதற்கு அதிக வாய்ப்புள்ளது. 


மேலும் படிக்க | சென்னை அணிக்கு கடும் எதிர்ப்பு - இலங்கை வீரரை நீக்குமா?


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR