தென்னாப்பிரிக்கா அணியின் முன்னாள் வீரர் ஹெர்ஷல் கிப்ஸ் டாப் 3 டி20 பேட்ஸ்மேன்களை தேர்வு செய்துள்ளார். அதில் இந்திய அணியின் 3 வடிவிலான கிரிக்கெட் போட்டிகளின் கேப்டனாக இருக்கும் ரோகித் சர்மாவை அவர் தேர்வு செய்யவில்லை. டி20 போட்டிகளில் குறைந்த பந்துகளில் அதிவேக சதமடித்த அவர், ஒருநாள் போட்டிகளில் அதிகமுறை இரட்டை சதம் மற்றும் அதிகபட்ச ரன்கள் என்ற சாதனைகளை தன்வசம் வைத்துள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | இளம் வீரருக்கு கேள்விக்குறியான இந்திய அணி வாய்ப்பு - யோயோ டெஸ்டில் தோல்வி


இதேபோல் மகேந்திரசிங் தோனியும் 20 ஓவர் போட்டிகளில் பல அரிய சாதனைகளுக்கு சொந்தக்காரராக உள்ளார் . ஆனால் அவர்கள் இருவரையும் தேர்வு செய்யாத ஹர்ஷல் கிப்ஸ், தன்னுடைய டாப் 3 பேட்ஸ்மேன்களில் விராட்கோலி, பாபர் ஆசம் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் ஆகியோரை தேர்வு செய்துள்ளார். விராட் கோலியைப் பொறுத்தவரை மூன்றுவடிவிலான கிரிக்கெட் போட்டிகளிலும் சராசரி 50க்கும் மேல் வைத்துள்ளார். பாபர் ஆசம் ஐசிசி 20 ஓவர் தரவரிசையில் முதல் இடத்தில் உள்ளார். 



ஆனால், இவர்களுடன் சம்பந்தமே இல்லாமல் ஸ்டீவ் ஸ்மித்தை 20 ஓவர் டாப் பேட்ஸ்மேனாக ஹிப்ஸ் தேர்வ செய்திருப்பது ரசிகர்களுக்கு விய்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஸ்டீவ் ஸ்மித் 20 ஓவர் போட்டிகளில் அவ்வளவு சிறப்பாக விளையாடுவதில்லை. ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் பல்வேறு சாதனைகளைக் கொண்டுள்ள அவர், 20 ஓவர் போட்டிகளில் 125 ஸ்டைக்ரேட் மட்டுமே வைத்துள்ளார். அவருடன் ஒப்பிடும்போது இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, சிறப்பான சராசரி மற்றும் ஸ்டைக் ரேட்டைக் கொண்டுள்ளார்.


மேலும் படிக்க | இங்கிலாந்து வீரரின் சாதனையை 27 ஆண்டுகள் கழித்து முறியடித்த பாபர் அசாம்! வேற லெவல் வெறித்தனம்! 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR