டி20 உலகக் கோப்பையின் சூப்பர்-8 பிரிவில் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் ஆட்டம் பார்படாஸில் உள்ள பிரிட்ஜ்டவுனில் உள்ள கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் இந்திய நேரப்படி இன்று இரவு 8:00 மணிக்கு நடைபெறுகிறது. இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே இதுவரை 8 டி20 சர்வதேச போட்டிகள் நடந்துள்ளன. இந்தியா 8 போட்டிகளில் 7ல் வெற்றி பெற்றுள்ள நிலையில், 1 ஆட்டம் முடிவு கிடைக்கவில்லை. இப்போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு அரையிறுதி வாய்ப்பு பிரகாசமாகும் என்பதால், இரு அணிகளும் இந்த போட்டியில் வெல்ல முனைப்பு காட்டும். இந்த சூழலில் இந்திய அணியில் முக்கியமான மூன்று பிளேயர்களுக்கு வாய்ப்பு கிடைக்காத நிலை உள்ளது. அவர்கள் யார்? என பார்க்கலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | AFG vs IND: இந்திய அணியில் ஒரே ஒரு அதிரடி மாற்றம்... ராகுல் டிராவிட்டே சொல்லிட்டாரு...!


1. யுஸ்வேந்திர சாஹல்


ஆப்கானிஸ்தானுக்கு எதிராக இன்று நடைபெறும் டி20 உலகக் கோப்பையின் சூப்பர்-8 ஆட்டத்தில் இந்திய அணியின் லெக் ஸ்பின்னர் யுஸ்வேந்திர சாஹல் விளையாட முடியாது. இந்திய அணியின் பிளேயிங் லெவனில் ரவீந்திர ஜடேஜா மற்றும் குல்தீப் யாதவ் கண்டிப்பாக இடம்பெறுவார்கள். இந்த சூழ்நிலையில், டீம் இந்தியாவின் லெவனில் லெக் ஸ்பின்னர் யுஸ்வேந்திர சாஹலுக்கு இடம் இருக்காது. சர்வதேச டி20 போட்டிகளில் 96 விக்கெட்டுகளை வீழ்த்தி, இந்திய அணிக்காக அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார் யுஸ்வேந்திர சாஹல். ரவீந்திர ஜடேஜா மற்றும் குல்தீப் யாதவ் இருப்பதால், யுஸ்வேந்திர சாஹலுக்கு இடம் கிடைக்காது.


2. சஞ்சு சாம்சன்


ஆப்கானிஸ்தானுக்கு எதிராக இன்று நடைபெறும் டி20 உலகக் கோப்பையின் சூப்பர்-8 ஆட்டத்தில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் சஞ்சு சாம்சன் விளையாட முடியாது. விக்கெட் கீப்பராக அணி நிர்வாகத்தின் முதல் தேர்வாக ரிஷப் பந்த் உள்ளார். அதனால், சஞ்சு சாம்சன் ஸ்பெஷலிஸ்ட் பேட்ஸ்மேனாக விளையாடுவது கடினம். இந்திய அணிக்கு வலுசேர்க்கும் ரோஹித் சர்மா, யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த் போன்ற கிரிக்கெட் வீரர்கள் இந்திய அணியில் ஏற்கனவே இடம்பெற்றுள்ளனர். இப்படிப்பட்ட நிலையில் ரோஹித் சர்மா பிளேயிங் லெவனில் சஞ்சு சாம்சனுக்கு முக்கியத்துவம் கொடுக்க மாட்டார்.


3. அக்சர் படேல்


ஆப்கானிஸ்தானுக்கு எதிராக இன்று நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பையின் சூப்பர்-8 ஆட்டத்தில் அக்சர் படேல் விளையாவதும் சந்தேகமே. குல்தீப் யாதவ் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் இடம் பிடிப்பார் என இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்திருப்பதால், அக்சர் படேலுக்கான காம்பினேஷன் பிரச்சனை அணிக்குள் வரும். ஏற்கனவே ஒரு இடது கை சுழற்பந்து வீச்சாளர் வரிசையில் ரவீந்திர ஜடேஜா இருப்பதால், அக்சர் படேல் வெளியே உட்காருவது ஏறத்தாழ உறுதியாகியுள்ளது.


மேலும் படிக்க |  கம்பீர் தலைமை பயிற்சியாளர்... அப்போ இவர்கள் தான் பௌலிங் கோச் - ஐடியா கொடுத்த பாக். வீரர்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ