இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு அறிவிக்கப்பட்ட 18 பேர் கொண்ட பட்டியிலில் ரோகித்துக்கு இடம் அளிக்கப்படவில்லை. இதனையடுத்து அவரை குறித்து சமூக வலைதளங்களில் ரசிகர்கள் விமர்சனங்களை வைத்து வந்தனர். இந்நிலையில் இந்த விமர்சனங்களுக்கு தனது ட்விட்டர் பதிவின் வாயிலாக பதில் அளித்துள்ளார் ரோகித் ஷர்மா.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.


முன்னதாக டி20 தொடரில் 2-1 என்ற கணக்கில் இந்தியா டி20 தொடரை வென்றது. இதனையடுத்து நடைப்பெற்ற ஒருநாள் தொடரில் 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்து வென்று இந்தியாவினை பழிதீர்த்துக் கொண்டது.


இந்நிலையில் அடுத்து நடைபெறவிருக்கும் டெஸ்ட் தொடரில் முதல் 3 பேட்டிகளில் விளையாடவிருக்கும் இந்திய கிரிக்கெட் அணியை இன்று BCCI அறிவித்துள்ளது.



இப்பட்டியலில் இருந்து மூத்த வீரர் ரோகித் ஷர்மாவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது தெரிகிறது. அதேவேலையில் இளம் வீரர் ரிஷாப் பந்திற்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. ஒருநாள் போட்டியில் ரோகித்தின் ஆட்டம் சிறப்பாக அமையவில்லை, இதன் காரணமாகவே இவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளதாக விமர்சனங்கள் வைக்கப்பட்டது.


இந்நிலையில் இந்த விமர்சன்ங்களுக்கு பதில் அளிக்கும் வகையில் ரோகித் தனது ட்விட்டர் பக்கத்தில் "மறுநாள் காலை சூரியன் நிச்சயம் உதிக்கும்" என பதிவிட்டுள்ளார். இந்த பதிவானது அவரது தன்னம்பிக்கையினை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.