இந்திய அணியின் டி20 கேப்டனாக ரோஹித் சர்மாவின் சாதனை!
இன்று இந்திய மற்றும் நியூஸிலாந்து அணிகள் மோதும் முதல் டி20 போட்டி நடைபெற உள்ளது.
உலக கோப்பை இறுதி போட்டியில் ஆஸ்திரேலியா அணியிடம் தோல்வி பெற்ற பிறகு அடுத்த 3 நாட்களில் தனது அடுத்த தொடரை விளையாட உள்ளது நியூஸிலாந்து. இந்திய அணி அரையிறுதிக்கு தகுதி பெறாமல் வெளியேறியதால் அந்த தாகத்தை தீர்த்து கொள்ள இந்த தொடரின் வெற்றி தேவைபடுகிறது. ரோஹித் ஷர்மா கேப்டனாகவும், ராகுல் டிராவிட் பயிற்சியாளராகவும், பல புதிய வீரர்களை கொண்ட இளம் இந்திய அணியாக களம் இறங்க உள்ளது. உலகில் உள்ள எந்த ஒரு அணியையும் தோற்கடிக்கும் சக்தி இந்திய அணியிடம் உள்ளது. ஒரு டி20 உலகக் கோப்பை முடிந்தாலும், அடுத்த போட்டிக்கான தயாரிப்பு இந்த முதல் ஆட்டத்தில் தொடங்குகிறது, ஏனெனில் அடுத்த உலக கோப்பைக்கு இன்னும் 11 மாதங்கள் உள்ளன. இரண்டு அணிகளிலும் முக்கிய வீரர்களுக்கு ஓய்வு அளிக்கபட்டுள்ளது.
ALSO READ அடுத்த ஆண்டு முழுவதும் இந்திய அணி விளையாட உள்ள போட்டி விவரங்கள்!
டி 20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் தோல்வியடைந்த பிறகு, நியூசிலாந்து மனதளவில் தங்களைத் தாங்களே உயர்த்திக் கொள்வது சற்று கடினமாக இருக்கலாம். ஆனால், இந்திய அணி வெற்றி பெற வேண்டும் கடினமாக முயற்சிப்பார்கள் என்று நியூஸிலாந்து அணிக்கு நன்று தெரியும். அதனால், எளிதான வெற்றியை நியூஸிலாந்து அணி எதிர்பார்க்க முடியாது. ரோஹித் ஷர்மா கேப்டனாக செயல்படுவது இது முதல் முறை இல்லை. ஐபிஎல்-லில் மும்மை அணிக்கு 4 கோப்பைகளை வென்று தந்துள்ளார். முதன்முறையாக முழுநேர T20 அணியின் கேப்டனாக இந்தியாவை வழி நடத்த உள்ளார். இதற்கு முன் கோலி இல்லாத சமயத்தில் கேப்டனாக இருந்துள்ளார்.
ரோஹித் சர்மா இந்திய அணியின் கேப்டனாக இருந்த 19 போட்டிகளில் 15-ல் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளார். இளம் இந்திய அணி வீரர்களுக்கு கேப்டனாக வழி நடத்த உள்ளார். டி20 உலகக் கோப்பையில் ரோஹித் தனது வழக்கமான முறையில் செட்டிலாகி, சிக்ஸர்களை பறக்க விடுவதற்குப் பதிலாக, முன்னுக்குப் பின் மிகவும் ஆக்ரோஷமாக காணப்பட்டார் ரோஹித். இந்த தொடரிலும் அதே பாணியை தொடர்வாரா அல்லது கேப்டனாக பொறுப்புடன் ஆடுவாரா என்ற எதிரிபார்ப்பு வந்துள்ளது.
ஸ்ரேயாஸ் ஐயர், ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் வெங்கடேஷ் ஐயர் ஆகியோரில் ஆறாவது பேட்ஸ்மேனாக யாரை களம்இறக்க வேண்டும் என்பதை இந்தியா தீர்மானிக்க வேண்டும். இந்த ஆண்டின் தொடக்கத்தில் காயம் ஏற்படுவதற்கு முன்பு ஸ்ரேயாஸ் மிகவும் சிறப்பாக தனது பேட்டிங்கை வெளிப்படுத்தினார். ஐக்கிய அமீரகத்தில் கெய்க்வாட் சிஸ்க்கே அணியின் தூணாக காணப்பட்டார். வெங்கடேஸ் அய்யரும் பேட்டிங் மற்றும் பவுலிங்கில் கலக்கி வருகிறார். மேலும், தனது சொந்த மாநிலமான மத்தியப் பிரதேசத்திற்காக 5 மற்றும் 6 வது இடத்தில் பேட்டிங் செய்துள்ளார். இந்திய அணி 6வது பேட்டிங்கில் இறக்குவதற்கு சரியான வீரரை தேடுகிறது. ஆல் ரவுண்டராக வெங்கடேஸ் சரியான தேர்வாக இருந்தாலும், பேட்டிங்கில் ருத்ராஜ் கெய்க்வாட் தனித்துவமாக காணப்படுகிறார். மேலும், இந்திய அணியில் ஏற்கனவே விளையாடி கொண்டிருக்கும் ஷ்ரேயஸ் அய்யரும் அணியில் எடுக்காமல் இருக்க முடியாது. இன்றைய போட்டியில் தனது சிறந்த அணியுடன் ரோஹித் சர்மா களம் இறங்க தயாராக உள்ளார்.
ALSO READ இந்தியாவில் நடைபெறப்போகும் 3 உலக கோப்பை போட்டிகள்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR