இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்திருக்கும் ஆஸ்திரேலியா அணி நேற்று இரண்டாவது டி20 போட்டியில் விளையாடியது.நாக்பூரில் பலத்த மழை காரணமாக மிக மிக தாமதமாக துவங்கியது. அதன் காரணமாக 8 ஓவர்கள் மட்டுமே அறிவிக்கப்பட்டது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா அணி 8 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 90 ரன்களை குவித்தது. இந்திய அணி சார்பாக அக்சர் பட்டேல் 2 ஓவர்கள் வீசி 13 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பின்னர் 91 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணி 7.2 ஓவர்களிலேயே 4 விக்கெட்டுகளை இழந்து 92 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்நிலையில் 8 ஓவர்கள் மட்டுமே கொண்டு இந்த போட்டியானது நடைபெற்றதனால் இந்த ஆட்டத்தில் கூடுதல் பேட்ஸ்மேனாக ரிஷப் பண்ட் அணியில் சேர்க்கப்பட்டார்.


 



அதன்படி இந்திய அணி சேசிங் செய்தபோது அதிரடியாக விளையாடக்கூடியவரான ரிஷப் பண்ட் முன்கூட்டியே களமிறக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் இறுதிவரை அவர் களமிறக்கப்படவில்லை. ஆனால் அவருக்கு முன்பாகவே களம் இறங்கிய தினேஷ் கார்த்திக் இரண்டே பந்துகளில் போட்டியை முடித்தார். 


மேலும் படிக்க | ரிஷப் பந்தா? தினேஷ் கார்த்திகா? உலகக் கோப்பை XI-ல் யாருக்கு வாய்ப்பு?


இந்நிலையில், ரிஷப் பண்ட்டிற்கு முன்னதாக தினேஷ் கார்த்திக் களமிறங்க என்ன காரணம் என்பது குறித்து ரோஹித் சர்மா கூறுகையில், “ரிஷப் பண்ட்டை முன்கூட்டியே களம் இருக்கலாம் என்றுதான் நினைத்தேன். ஆனால் இறுதி நேரத்தில் டேனியல் சாம்ஸ் ஆப் கட்டர்களை வீசுவார் என்பதனால் தினேஷ் கார்த்திக்கை களம் இறக்க நினைத்தேன். அதேபோன்று அவரும் தனது ரோலை மிகச் சிறப்பாக செய்து கொடுத்து போட்டியை வெற்றிகரமாக முடித்துக் கொடுத்தார்” என்றார்.


முன்னதாக தினேஷ் கார்த்திக் டி 20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் சேர்க்கப்பட்டதற்கு கௌதம் கம்பீர் தொடர்ந்து விமர்சனத்தை முன்வைத்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ